Wednesday, October 7, 2009

தாயகம் திரும்புகிறேன்!

அன்புடையீர், இவ்வளவு நாள் எங்கள் அமெரிக்கா பயண கட்டுரையை படித்து ரசித்த அன்பு நெஞ்சங்களுக்கு நன்றி! நன்றி! குறிப்பாக இவ்வளைபதிவில் பயண கட்டுரைகள் சிறப்புடன் அமைய பேருதவி செய்த என் மனைவி திருமதி உமா சுந்தர் அவர்களுக்கு என் நெஞ்சார்ந்த நன்றி!

நாளை நான் தாயகம் திரும்புகிறேன். அங்கு உங்களை புதிய நோக்கில் இந்தியா சுற்றுலா அனுபுவங்களுடன் சந்திக்கிறேன்!

அன்புடன்,
சுந்தர்.

Sunday, September 20, 2009

CLEVELAND AIR SHOW

CLEVELAND-NATIONAL -AIR SHOW -at BURKE LAKE FRONT AIRPORT. இந்த விதமான சாகஸகாட்சிகளை காண OHIO STATE இல் உள்ள CLEVELAND நகர் நோக்கி பயணமானோம் . இரவு நாங்கள் , EXTENDED STAY AMERICA- HOTEL'இல் தங்கினோம் மறுநாள் ஏர்போர்ட் வந்து, 21$ நபர் ஒன்றுக்கு வீதம் மூன்று டிக்கெட் வாங்கி உள்ளே சென்றோம் இங்கு U S ARMY-plane பல கண்டோம் விமான உள்ளே உள்ள உட்கட்ட அமைப்பு கண்டோம். ராணுவ விமானம் எவ்வாறு போர் வீரர்களை லாரி, டாங்க் ஏற்றி செல்லும் மிக பெரிய விமானம் நிறைய ஹெளிகாப்டேர்கள் எவ்வாறு பயன் படுகிறது என விளக்கினார்கள். பொதுமக்களின் கேள்விகளுக்கு விளக்கம் தருகின்றனர். பின்னர் பல்வேறு விமான சாகசங்களை மற்றும் பாரசூட் குதிக்கும் வீரர்களையும் கண்டோம். இந்தியாவில் உள்ள சூர்யா கிரண் வீரர்களை போல் THUNDER BIRDS வீரர்கள் செய்யும் பல்வேறு விதமான சாகஸ காட்சிகளை கண்டோம். விமானம் உயரே அதி வேகத்தில் பறக்கும் சமயம் பெண் ஒருவள் விமானம் முன் புறம் நின்று பல்வேறு கோணங்களில் சாகசம் செய்தது அனைவரையும் பிரமிக்க செய்தது. கண்டோம் களித்தோம். பின்பு மகிழ்வுடன் இல்லம் திரும்பினோம்.

Tuesday, September 15, 2009

BOSTON and New England trip!

27.08.09 அன்று இரவு எட்டரை மணிக்கு PHILADELPHIA INTERNATIONAL AIRPORT சென்று எங்கள் காரரை LONGTIME-PARKING LOT இல் நிறுத்தி விட்டு ஏர்போர்ட் பஸ் இல் விமானம் நோக்கி சென்றோம். ஒரு மணி நேர பயணத்திற்கு பின் MANCHESTER BOSTON REGIONAL AIRPORT(MHT) இல் ப்ளேன் இறங்கியது . அங்க எங்களை அம்ர் கார் உடன் பாஸ்டன் நகர் அழைத்து சென்றார். அன்று இரவு தங்கி மறு நாள் காலை கிளம்பி அங்குள்ள துறைமுகம் மற்றும் கடைகள் , ஹோட்டல்கள், பூங்காக்கள் கண்டோம். மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருந்தது. இங்கு இந்தியா உணவினை சாப்பிட்டோம். பின்னர் காரில் கிளம்பி NEW HAMPSHIRE - ROBBINS HOTEL இல் தங்கினோம்.

FRANCONIA NOTCH STATE PARK - FLUME GORGE: சனிக்கிழமை காலை சென்று அனேக நீர்விழுச்சிகள் பார்த்தோம். இது முழுக்க க்ரநிட்கற்களால் ஆன மலை பாறைகளில் அனேக உயரமான பல மரங்கள் வளர்ந்து வியப்பூட்டுகிறது. பாறைகளில் மரம் வளராது. ஆனால் இங்கே பல மரங்கள் விண்ணை முட்டும் அளவிற்கு பறைகளிலே வளர்ந்து கண்களுக்கு விருந்து அளிக்கிறது. இது சுற்றுலா பயணிகள் அதிக வரவிற்கு காரணமாகும். அனேக மக்கள் மலைகளையும், அருவிகளையும், பாலங்களையும் பார்த்து ரசித்து வியக்கின்றனர். அருவியை காணும் பொருட்டு மரபாலங்கள் அமைத்து இருக்கிறார்கள். புகைப்பட கலைனர்கள் அதிக அளவில் வருகை தருகின்றனர். THE FLUME என்ற இந்த இடம் கிட்ட தட்ட இருநூறு மில்லியன் வருடங்களுக்கு முன்னர் பாறைகள் உருகி வழிந்து பல வடிவங்களில் நின்றது. பின்னர் இது இரண்டாக பிளந்து, குளிர்ந்து மலையாக தற்போது காண படுகிறது. இந்த மலை பிளவில் அனேக நீர்விழுச்சிகள் உண்டு. FLUME COVERED BRIDGE -- 1886 இல் கட்ட பட்டது. பின்னர் table rock (500 feet length, 75 feet breadth ) உடைய வழுக்கும் பாறை கண்டோம். அதில் மர படிகள் உண்டு. இதில் நாங்கள் இரண்டு மைல் நடந்து சென்றோம். புகை படங்கள் எடுத்தோம். Liberty Gorge, Sentinel pine bridge and pool,wolf den, glacial boulders என்ற இடங்களை கண்டோம். இந்த மலையில் அனேக மரங்கள் , வற்றாத அருவிகள் ஆகியவை இயற்கையாக உண்டான சுற்றுலா இடமாகும். பின்னர் Mount Washington என்ற இடம் நோக்கி சென்றோம்.

அமெரிக்காவில் உள்ள மற்றும் சுற்றுலா பயணிகள் அனைவரும் பார்க்க வேண்டிய இந்த இடம் மவுண்ட் வாஷிங்டன் மலை ஆகும். இவ்வளவு புகழ் மிக்க மழையின் நுழைவு வாயிலில் முப்பது டாலர் ( கார் மற்றும் ஓட்டுனர்) மற்றபடி ஒரு நபருக்கு எட்டு டாலர் வீதம் வசூல் செய்கிறார்கள். இதன் கூடமலை ஏறும் போது காணும் காட்சிகள் அவ்வாறே இறங்கும் போதும் குறித்து குறுந்தகடு கொடுக்கிறர்கள். இதனை காரில் பொருத்தி விளக்கங்கள் அறியலாம். நாங்கள் மலையில் ஏறும் போது பனி மூட்டத்துடன் கூடிய அழகிய காட்சிகளை புகை படம் எடுத்தோம். இந்த மலை ஏறி காண மலை சாலை திட்டம் 1854 ஆண்டு துவக்கப்பட்டு இன்று வரை நன்றாக பராமரிக்க படுகிறது. இது எட்டு மைல் தூரமுள்ள மலை சாலையாகும். இந்த மலையின் மேல் வானிலை ஆராய்ச்சி மையம் உள்ளது. இந்த மைய சேவை அமெரிக்கா முழுவதும் பயன் படுகிறது. பல்வேறு மோசமான பருவ நிலைகளை தாங்கியது. (புயல், காற்று, பனி , மழை , மின்னல் ) . மலை மீது செல்ல விசேஷ ரயில் பாதை உண்டு. இதில் செல்லும் ரயிலில் குறிப்பிட்ட நேரத்தில் பயணிகள் மலைக்கு சென்று காட்சிகளை கண்டு ரசிக்கலாம். இந்த மலை 6288 FEET NORTH EASTERN UNITED STATES TALLEST POINT Some Facts About Mount Washington. Elevation - 6288 ft. Lowest Temperature _ 47 f Highest Temperature + 72 f Average Annual Temperature 27.2 f Average Annual Wind Speed 35.3 mph Average Annual Snow Fall 314.8 in Greatest Seasonal Snow Fall (1968-69) 566.4 in Peak Wind (World Record April 12, 1934 ) 231 mph Wind Exceeds Hurricane Forces ( 75 mph ) About 104 Days Per Year Average Daily Wind Speed 34 mph Open May to October Only ACADIA NATIONAL PARK: இது மெயின் ஸ்டேட் இல் உள்ள மிக சிறப்பு வாய்ந்த ஒரு பூங்காவாகும் .இந்த பூங்காவை பற்றி ஒரு அழகான படம் ஒன்று வரவேற்பு அலுவலகத்தில் உள்ள திரை அரங்கில் காணபித்தர்கள். இது அந்த பூங்கா, அது எவ்வாறு உருவாக்கப்பட்டது, மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் வாழ்கை பற்றியும், பூங்காவில் உள்ள இடங்கள் பற்றி விரிவான தொகுப்புரை காண்பிக்க பட்டது .இந்த பூங்காவில் மலை சுற்று பாதையில் அனேக கடற்கரைகள் வருகின்றன. இந்த இடத்தில் கார், சைக்கிள் நடைபயணம் ஆகியவை உண்டு. இதில் ஜோர்டான் பாண்டு , மணல் கடற்கரை, பாறைகளில் அலைகள் காடுகள், ஆகியவை அதிகம் காண படுகிறது. இந்த பாறையில் அலைகள் இருபத்து அடிக்கு மேல் வேகமாக வந்து அவ்வப்போது மோது கிறது. இதை காணும் பொருட்டு இரும்பு கம்பிகளுடன் கூடிய பாலம் மற்றும் படிகட்டுகள் உண்டு. இதை நாம் கண்டு ரசிக்கலாம். இது போல் காட்சி எங்குமே காண்பது அரிது. இதில் அனேக மக்கள் புகைப்படம் எடுக்கிறார்கள். CADILLAC MOUNTAIN - ACADIA - JORDAN POND இந்த மலை மீது ஏறுவதற்கு தரமான சாலை உண்டு. மலை மீது ஏறி சென்றால் அங்கிருந்து கீழே உள்ள அனைத்து காட்சிகளையும் கடல்களையும் கப்பல் படகு போன்ற வற்றையும் கண்டு ரசிக்கலாம். இந்த கடல் மார்கமாக கனடா நாட்டுக்கு செல்ல கப்பல் போக்குவரத்து உண்டு. பனி நம் மீது படுகிறது. மலை முழுவதும் மேகக்கூட்டம் காணலாம். வழியில் நிறைய அருவிகள் மலையிலிருந்து கீழே விழுகிறது. வழியில் ஜோர்டான் பாண்டு என்ற இடம் கண்டோம். இந்த அழகிய மலையின் நிழலில் தெளிவாக உறங்கும் ஜோர்டான் பாண்டு கண்டோம். இந்த நீரில் மலை இன நிழல் அழகாக தெரிகிறது. இந்த நீர் சுற்று புற கிராம மக்களுக்கு குடிநீராக பயன் படுகிறது. பின்னர் SAND BEACH, SEAL HARBOUR BEACH, NORTH EAST HARBOUR கண்டோம். பின்னர் கடற்கரையில் உள்ள மூன்று கலங்கரை விளக்குகளை கண்டு ரசித்தோம். இந்த கடற்கரையில் சுற்றிலும் அழகிய பூங்காக்கள் அமைத்து அழகு படுத்தி உள்ளனர். நாங்கள் இவைகளை கண்டு ரசித்தோம் . நாங்கள் மேலே சொல்ல பட்ட அனைத்து இடங்களையும் காண விமான பயணம் மேற்கொண்டோம்.

Monday, September 14, 2009

JIM THORPE----LEHIGH GORGE PARK

12.07.09 காலை கிளம்பி எழுபது மைல் தூரத்தில் உள்ள LEHIGH GORGE PARK -JIM THORPE என்ற இடத்திற்கு சென்றோம். இது அமெரிக்காவின் புகழ் பெற்ற இடமாகும். 1950-இல் இதுவும் முக்கியமான மற்றும் சிறந்த குளிர் பிரதேச வரிசையில் இந்த கிராமம் - முதலிடம் வகிக்கிறது. (top 10) இது அமெரிக்காவின் சுவிற்சர்லாந்து என போற்ற படுகிறது. இந்த பூமி வாழ்வதற்கும் , விளையாடுவதற்கும் பொழுது போக்கு அம்சங்கள் -நிரம்பிய மிக சிறந்த சுற்றுலா தலமாககருத படுகிறது. இங்கே பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடங்கள் , இன்னும் அதே தோற்றத்துடன் கம்பிரமாக காட்சி அளிக்கிறது. இன்னும் அவ்வாறே பராமரிக்க படுகிறது. தபால் நிலையம், வங்கிகள் , சில ஹோட்டல்கள் , ரயில் நிலையம் அவ்வாறே பழமையான கட்டிடத்திலேயே காண படுகிறது. இது அந்த காலத்திற்கு நம்மை அழைத்து செல்கிறது.

இங்கே சைக்கிள் ஓட்ட 15 மைல் சுற்றளவிற்கு தனி பாதை உண்டு. இது ரயில் பாதையை ஒட்டியே வருகிறது. மலையில் இருந்து அனேக அருவிகள் கீழே வந்து நம்மை களிபடைய செய்கிறது. இங்கு படகு சவாரி செய்ய ஆசைபட்டு குடும்பமாக நிறைய பயணிகள் வருகின்றனர். அங்கங்கே கூடாரம் அமைத்து தங்கி விளையாடி மகிழ்கின்றனர். சைக்கிள் ஓட்டுவது, மீன் பிடிப்பது, நீந்துவது , விளையாடுவது என குடும்பம் மற்றும் நண்பர்கள், உறவினர்களுடன் வருகின்றனர். அமெரிக்காவில் உள்ள மிக பெரிய கோடீஸ்வரர்களும் இந்த கிராம வாசிகளே.

சனிக்கிழமை இங்கே கூடும் சந்தையில் காலை எட்டு மணி முதல் பகல் ஒரு மணி வரை பச்சை காய்கறிகள் , பழவகைகள், தரமானதாக விற்பனை செய்ய படுகிறது. இது பிரபல மானது. இங்கே தான் அமெரிக்காவின் முதல் நிலக்கரி சுரங்கம் கண்டு பிடிக்கப்பட்டு அந்த நிலக்கரி வெளி மாநிலங்களுக்கு அனுப்பும் பொருட்டு ரயில் பாதையும் முதலில் அமைக்க பட்டது,. இவைகள் தற்போது வழக்கில் இல்லா விடினும் அதே பழமையான ரயில் சுமார் பதினாறு மைல் தொலைவு LEHIGH GEORGE SCENIC RAILWAY என்ற பெயரில் இயக்க படுகிறது. இந்த ரயில் மலைகள், ஆறுகள் , காடுகள், அருவிகள் , உயரமான மரங்கள் உடைய மலைகள் கூடிய ரம்மியமான சுழ்நிலையில் மிக குறைந்த வேகத்தில் மணி அடித்து கொண்டே இந்த டீசல் என்ஜின் நம்மை அழைத்து சென்று மகிழ்விக்கிறது.

இது சனி, நாயிறு திங்கள் கிழமைகளில் இயக்க படுகிறது. கட்டணம் பன்னிரண்டு டாலர் ஆகும். இதில் சிறுவர் முதல பெரியவர் வரை பயணித்து மகிழ் கின்றனர் நாங்களும் இந்த ரயிலில் பயணம் செய்து மகிழ்ந்தோம். பின்னர் மலை பாதையில் எங்கள் கார் மூலம் அனேக இடங்கள் சென்று பார்த்து மகிழ்ந்தோம். இங்கே குழந்தைகள் மகிழ வண்ணத்து பூச்சிகள் அதிக அளவில் வந்து பல் வண்ணங்களில் பறந்து மகிழ்விக்கிறது.

இதைகாண பள்ளி , மாணவ மாணவியர் சுற்றுலா அதிக அளவில் வருகின்றனர். குறிப்பாக குழந்தைகள் கூடி விளையாடி மகிழவும் புது மன தம்பதியர் கூடி மகிழ என இந்த சுற்றுலா மையம் விளங்குகிறது. கிராமத்தில் அனேக சுற்றுலா அமைப்பாளர் உள்ளனர். இவர்கள் படகு மற்றும் மிதிவண்டி வாடகைக்கு தந்து உதவுகின்றனர். பின்னர் HICKORY RUN STATE PARK நோக்கி பயணமானோம். இங்கே உயர்ந்த மரங்கள் பூக்களுடன் நிறைய செடிகள் என மண் சாலையில் உள்ளே சென்றோம். இங்கே மிக பெரிய ஏரிஉள்ளது. இது நிரம்பி ஆறாகவெளியே காட்டினுள்செல்கிறது. இங்கே சிலர் மீன் பிடித்து கொண்டிருந்தனர். இதனை தொடர்ந்து சென்ற நாங்கள் 3.5 mile - BOULDER FIELD என அழைக்கப்படும் பாறைகள் உள்ள இடத்திற்கு சென்றோம்.

இங்கே பரந்த வெளியில் நிறைய பாறைகள் கண்டோம். சில பாறைகள் இருபத்தாறு அடி நீளம் உடையவை. இவை அமெரிக்காவில் இங்கே மட்டும் தான் காண படுகிறது. அடுக்கி வைத்தாற்போல் பல் வடிவங்களில் பாறை வயல் நம்மை வியக்க வைக்கிறது. நாங்கள் சிறிது தூரம் இதன் மீது நடந்து சென்றோம். கடினமானதாக இருந்ததால் திரும்பி விட்டோம். சிலர் அதிக தூரம் நடந்தார்கள். பல்வேறு இயற்கை மாறுதலால் மற்றும் பருவ மாற்றங்களினால் இப்பாறைகள் தோன்றி இருக்க கூடும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இது குறித்து அறிவிப்பு பலகை வைத்துள்ளனர் இதை கண்ட பின் இல்லம் திரும்பினோம்.

எங்கள் பயணம் தொடரும்.

Saturday, September 12, 2009

Newyork - Part II

மீண்டும் நியூயார்க் நகரை காணும் பொருட்டு சனிக்கிழமை காலை காரில் கிளம்பினோம்.

NEWYORK LIBERTY SCIENCE CENTRE

இந்த கட்டிடம் நான்கு மாடி கட்டிடம் ஆகும். இதில் குழந்தைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் கட்டிட நிபுணர்களுக்கும் என பிரித்து வடிவமைத்துள்ளனர் . இங்கே IMAX DOME THEATRE - FORCES OF NATURE என்ற படம் பார்த்தோம். இது 45 நிமிடங்கள் நம்மை வியக்க வைத்தது. எரிமலை பொங்கி வருவது ,சூறாவளி காற்று , புயல் பற்றிய விஞ்ஞான சம்பந்தமான குறிப்புகள் பற்றிய படம். இதன் கட்டணம் எழு டாலர்.

TOP OF THE ROCK OBSERVATION DECK - ROCK FELLER CENTRE

73 வது மாடி கட்டிடத்திலிருந்து நியூயார்க் நகரின் அழகை ரசிக்கும் பொருட்டுகலை நயம் மிக்க இந்த கட்டடத்தினுள் கட்டணம் செலுத்தி சென்றோம். இது மிகவும் நேர்த்தியாக பராமரிக்க படுகிறது. நியூயார்க் நகரின் பெருமைகளை விளக்கும் திரைப்படம் இங்கு காண்பிக்க படுகிறது. மற்றும் கட்டிடம் கட்டிய தொழிலாளர்களின் விவரங்களும் படத்தில் காண்பிக்கின்றன உள்ளே சென்ற நாங்கள் லிப்ட் கண்டவுடன் பிரமிப்பு அடைந்தோம்.

வரிசையாக பத்துபேர் வீதம் அனுமதிகிறார்கள். பின்பு உள்ளே சென்ற நாங்கள் ஒரு நிமிடம் இருபத்துநாலு வினாடிகளில் அறுபத்தி ஏழாவது மாடிக்கு விரைந்து சென்றது. இவ்வளவு வேகமாக உயரே செல்வது இதுவே முதன் முறையாகவும் , இவ்வளவு உயரமான கட்டடத்தில் சென்றதே கிடையாது. மேலே சென்ற நாங்கள் கட்டிடத்தின் மேல் தளத்திளிறுந்து பல கோணங்களில் உயரமான கட்டிடங்களையும் , தொலைவில் தெரியும் ஆறு படகு கண்டோம். சிறிய உருவில் தெரியும் கார் மனிதர்கள் - என உற்சாகமாக அனைத்தையும் நன்கு பார்வை இட்டோம். இன்னும் உயரே சென்று காண - லிப்ட் மூலம் இரண்டு மாடிகள் மேலே சென்று பல இடங்களையும் கண்டு புகைப்படம் எடுத்தோம். இந்த அரியகாட்சிகள் எங்களை மிகவும் சந்தோஷ கடலில் ஆழ்த்தியது.
அருண் பல இடங்களையும் எங்களுக்கு இங்கிருந்து காண்பித்து விளக்கினான். அருண் இந்த மா நகரில் சில ஆண்டுகள் தங்கி உள்ளான் என்பது குறிப்பிட தக்கது. - எனவே நகர் வலம் வருவதில் எந்த பிரச்னையும் இல்லை.

AMERICAN MUSEUM OF NATURAL HISTORY

இந்த அருங்காட்சியகம் சென்ட்ரல் பார்க் மேற்கில் எழுபத்து ஒன்பதாவது

தெருவில் உள்ளது. நான்கு மாடி கட்டடத்தில் இது இயங்குகிறது. இதனை அதிக அளவில் மக்கள் பார்வை இடுகின்றனர். மான், பறவைகள் , புலி, சிங்கம் , யானை சிறுத்தை ஆடுகள் , ஓநாய் , ஆகியவை உள்ள இந்த அருங்காட்சியகம் உண்மையில் உயிர் அற்ற இவைகள் உயிருடன் இருப்பது போன்றே மிக நேர்த்தியாக காண படுகிறது.
பல்வேறு அமெரிக்கா, ஆப்ரிக்கா ஆதி காலங்களில் வாழ்ந்த மிருகங்கள், விசித்ர பறவைகள் ஆதி கால மனிதன் , வாழ்கை முறை, விவசாயம், தொழில்கள் என பல்வேறு அம்சங்கள் காணப்பட்டது, இந்திய மக்கள் சில தெய்வங்கள் குறிப்பாக கணபதி விக்ரகம் காண பட்டது. புத்த , சீனா தாய்லாந்து கோவில்களின் மாதிரி காணப்பட்டது. இதனை விரிவாக எழுத முடியவில்லை. அவ்வளவு விஷயங்கள் நேரில் பார்க்கும் போது மட்டுமே கண்டு வியக்க முடியும். இதற்கு பின் சென்ட்ரல் பார்க் சென்றோம். மிகுந்த பரப்பளவில் அமைந்த பூங்காவாகும். இங்கு நடை பயில, சைக்கிள் ஓட்ட தனி சாலை உண்டு. படகு சவாரி செய்ய இரண்டு ஏரிகள் உண்டு. சற்று நேரம் அமர்ந்து ஓய்வு எடுத்தோம்.
பின்னர் நியூயார்க் பாதாள ரயிலில் எங்களை அருண் முப்பத்து ஆறாவது தெரிவிற்கு அழைத்து சென்றான். இந்த ரயில் ஏசி வசதி உடன் பூமிக்கு அடியில் மிக விரைவாக செல்கிறது. எங்கள் அமெரிக்கா ரயில் பயணமும் நிறை வேறியது. MACYS என்ற உலகின் மிக பெரிய அங்காடி கண்டோம். மிக
பெரிய இந்த வணிக வளாகம் 5 மாடிகள் கொண்டது. இந்த தெருவில் இருந்து அடுத்த தெரு வரை கடை செல்கிறது. இரு புறமும் வழி உண்டு.
TIME SQUARE
நியூயார்க் நகரில் உள்ள இந்த இடம் அனேக விளக்குகள் , விளம்பரங்கள் ,உயரமான வர்த்தக நிறுவனங்கள் நடை பாதை கடைகள் என விளங்குகிறது. அதிக மக்கள் கூட்டம் மாலையில் அலை மோதுகிறது.
நாங்களும் கண்டோம் களித்தோம். இது மிகவும் மறக்க முடியாத இடமாகும்.

Thursday, September 10, 2009

நியூயார்க் - Part I

நியூயார்க் நகரை காண எங்கள் காரில் கிளம்பி நியூஜெர்சி நகரின் எல்லையில் உள்ள பழங்கால ரயில் நிலையத்தில் காரை நிறுத்தி விட்டு ரயில் நிலையத்தை பார்த்தோம் . சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இருப்பு பாதைகளை உடைய ரயில் நிலையம் தற்போது காட்சிக்கு மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆயினும் பல ஆண்டுகளுக்கு முன்னர் இதில் பலர் பயணம் செய்துள்ளனர். தற்போது இந்த இடம் பழமை மாறாமல் நினவு சின்னமாக உள்ளது. இங்கே உள்ள டிக்கெட் கொடுக்கும் இடத்தில் பன்னிரண்டு டாலர் பணம் செலுத்தி சுதந்திர தேவி சிலை காண (STATUE OF LIBERTY) கப்பலை நோக்கி சென்றோம். இங்கே HUDSON ஆற்றில் கப்பல் போக்குவரத்து படகு சவாரி அதிக அளவில் காண படுகிறது. நாங்கள் இந்த ஆற்றின் மூலம் கடல் போன்ற இந்த நதியில் கப்பலில் பயணம் செய்தோம். முதலில் ELLIS ISLAND பார்த்தோம். இங்கு மிக பெரிய MUSEUM உள்ளது. இந்த தீவில் சுமார் ஒரு மணி நேரம் தங்கி இருந்து தொலைவில் உள்ள தீவில் காட்சி அளிக்கும் அமெரிக்க சுதந்திர தேவி சிலையின் அழகை ரசித்தோம். அதே கப்பலின் மேல் தளத்தில் உள்ள பார்வையாளர் அறையில் இருந்து அனேக கப்பல்களையும் தொலைவில் தெரியும் நியூயார்க் நகரின் அழகையும் உயர்ந்த கட்டிடங்களையும் கண்டோம். இப்பூது எங்களுடைய அழகிய கப்பல் சுதந்திர தேவி சிலை காண படகு துறையில் நிறுத்த பட்டுள்ளது. நாங்கள் தீவின் உள்ளே சென்று சிலையின் அழகை பார்வையிட்டோம். இந்த சிலை அமெரிக்கா சுதந்திரம் பெற்ற பின் பிரான்ஸ் நாட்டினர் இதை வழங்கினார் இது மிக பெரிய சிலை ஆகும் . இதனை காண பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் நாள் தோறும் வருகை தருகின்றனர். எப்போதும் அதிக மக்கள் கூட்டம் காண படுகிறது. இங்கு வருவதற்கு இரண்டு வழிகள் உள்ளது. நியூயார்க் நியூஜெர்சி இப்பாதை நதியின் மூலம் மற்றும் கப்பலின் மூலம் நடை பெறுகிறது. நியூயார்க் பகுதியில் இருந்து வரும் மக்கள் தொகை அதிக அளவில் காண படுகிறது. இந்த சுதந்திர தேவி சிலை உள்ள இடம்12எய்க்கர் பரப்பளவு உடையது. சிலையின் உயரம் 151 அடிகள் , பீடம் சேர்த்து 305 அடிகள் ஆகும் இதன் கையில் உள்ள தீபசுடருடன் உள்ள தீபந்தம் செப்பினால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டது. மற்றொரு கையில் அமெரிக்கா சுதந்திரம் பெற்ற நாளினை குறிக்கும் வகையில் JULY 4 th MDCCL XXVI என்று குறிக்க பட்ட புத்தகம் உள்ளது. oct 28 1886 இல் பிரான்ஸ் நாட்டினர் அமெரிக்காவுக்கு இந்த சிலையை வழங்கினார் .இது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டின் ஒற்றுமையை குறிக்கிறது. முதன் முதலில் சிலையின் கிரீடம் சிவப்பு வண்ணத்தில் காணப்பட்டது. பின்னர் இது பச்சையாக மாற்ற பட்டது. கிரீடத்தில் உள்ள ஏழு கோடுகள் சூரியனின் ஏழு வண்ணங்களை பிரதி பலிக்கிறது. இதனை கண்ட பின் நியூயார்க் நகரின் அழகை காணும் பொருட்டு காரில் ஹட்சன் நதியின் அடியில் போடப்பட்டுள்ள பாதாள சாலையின் மூலம் நதியை கடந்து நகருக்குள் வந்து சேர்ந்தோம். இந்த இரண்டு மைல்தொலைவு உள்ள பாதாள பாதை நியூஜெர்சி நியூயார்க் நகரங்களின் எல்லையாக விளங்குகிறது.
நியூயார்க் நகரின் பல உயர்ந்த கட்டடங்கள் , பல கடைகள் கண்டோம் இது நம்ப ஊர் சென்னை போன்று நிறைய மக்கள் கூட்டம்மாக போக்குவரத்து நெரிசல் அதிகமாகவும் உள்ள்து. நடை பாதை கடைகள் கண்டோம். அடுத்து 32 ஆண்டுகள் முன்னால் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் கட்டிய ஸ்ரீ மகாகணபதிஆலயம் FLUSHING பயணமானோம். இக்கோவில் THE HINDU TEMPLE SOCIETY OF NORTH AMERICA NY. என்ற அமைப்பின் மூலம் பராமக்க படுகுகிறது தமிழ் பேசும் மக்களால் மீகவும்நன்றாக நடத்தபடுக்றது. இங்கு சுப்ரமணியர் , வள்ளி , தேவானை, ஐயப்பன், நரசிம்ஹர், சக்கரத்து ஆழ்வார் ,பெருமாள் , சிவன் , பார்வதி , நவக்ரகாங்கள் ஆகிய சன்னதிகள் உண்டு. தேவி கொடியூர் மாதா என்ற விக்ரஹம் முதலை மீது கையில் சூலம் ஏந்தி காட்சி அளிக்கிறது. இங்கு வட இந்தியா மக்கள் வந்து பஜன் செய்து வழி பட்டு மகிழ்கின்றனர். இங்கே கான்டீன் சிறப்பாக உள்ளது. நிறைய கூட்டம் காணப்பட்டது. விநாயகசதுர்த்தி அன்று வீதி உலாவில் தங்க ரதத்தில் விநாயகர் நகர் வலம் வந்து அருள் புரிவார் . இதனை மக்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர். இங்கே தமிழ் ஸ்லோக புத்தகங்கள் ஸமஸ்க்ரிதநூல்கள் ராமாயணம், கீதை புத்தகங்கள், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கிடைக்கிறது. இரவில் BROOKLYN BRIDGE, MANHATTAN BRIDGE பார்த்தோம். ரயில் மற்றும் சாலையும் இதே பாலத்தில் மேலும் கீழும் அமைக்க பட்டுள்ளது. இரவில் வண்ண விளக்கு ஒளியில் இந்த பாலம் மற்றும் நகரம் , நதியில் செல்லும் கப்பல் ,படகு நம் கண்களுக்கு விருந்து அளிக்கிறது. அனேக மக்கள் இதனை கண்டு மகிழ மாலை முதலே வருகின்றனர். புகைப்பட கலைனர்கள் அதிக அளவில் வந்து பல கோணங்களில் புகைப்படம் எடுக்கின்றனர்.
(தொடரும்..)

Tuesday, July 14, 2009

July 4th Road trip - Part II

5.07.09 Buckroe Beach :

நாங்கள் மேற்கூறிய கடற்கரையை சென்று பார்த்தோம். இது அமெரிக்காவில் நாங்கள் முதல்முதலில் பார்த்த கடற்கரை ஆகும் . இங்கே மரப்பாலம் அமைத்து பல அடி தூரம் கடலின் அழகை காணும் பொருட்டு, இப்பாலம் அமைக்க பட்டுள்ளது. காலில் கடல் நீர் படா வண்ணம் , கடலில் அதிக தூரம் சென்று கடலின் அழகை ரசிக்கும் வண்ணம் இப்பாலம் அமைந்துள்ளது.

இங்கே கடலில் குளிப்பவர்களை தண்ணீரில் அடித்து செல்லாமல் காப்பாற்ற Sea guard என்ற பாதுகாவலர்கள் கரையில் அங்கங்கே உயரமான மேடையில் அமர்ந்து கண்காணிக்கிறார்கள் .இவர்கள் ஆற்றும் பணி மேலானது. மனித உயிருக்கு அமெரிக்கர்கள்கொடுக்கும் மதிப்பு இதனை எடுத்து காட்டுகிறது.

HAMPTON ROADS BRIDGE TUNNEL: இந்த பாலம் அட்லாண்டிக் கடலின் மீது கட்டப்பட்ட பாலம் ஆகும். இது சுமார் பதினாறு மைல் நீளம் உள்ளது. நடுவே கப்பல்கள் செல்லும் அளவிற்கு கடலின் அடியில் சுரங்க பாதை பதினாலு மைல் தூரம் உள்ளது. இது இரண்டு இடங்களில் கடலில் நடுவே வருகின்றது. ஒரு பாதை கப்பல் போவதற்கும் மற்றது கப்பல் வருவதற்கும் என வழி அமைத்துள்ளனர். இப்பாலம் அதிக வலுவுள்ளதாக அமைக்க பட்டுள்ளது. அனேக மிக பெரிய வாகனங்கள் கூட செல்லலாம் . இதுவும் இரு வழி பாதை ஆகும். நாம் இப்பாலத்தில் காரில் செல்லும் போது அடுத்த பாலம் ( வரும் வழி ) பார்த்து மகிழலாம் . இந்த பாலம் கடலின் மேல் கட்ட பட்டதால் சுமார் முன்னுறு மைல் சாலை வழியே சுற்றி செல்லாமல் நாற்பது மைல் கடல் வழியாக சென்று பயணத்தை முடிக்கலாம். இதற்கு கட்டணம் ஒரு வழி பதினாலு டாலர் ஆகும். நாங்கள் இந்த பயணித்தை ரசித்து மகிழ்ந்தோம். CAPEMAY LEWES FERRY: நாங்கள் எங்கள் காருடன் Capemay என்ற துறைமுகம் வந்து இங்கே புறப்படும் கப்பலில் எண்பது நிமிடங்கள் சுமார் ஐன்பது மைல் அட்லாண்டிக் கடலில் எங்கள் காருடன் பயணம் செய்தோம். துறைமுகம் வந்த பின் டிக்கெட் பெற்று வரிசையில் நிற்க வேண்டும். பின்பு அதிகாரிகள் வந்து கப்பலின் அடி தளத்திற்கு செல்ல வழி சொல்கிறார்கள் . அருண் காரை ஒட்டி கப்பலில் எங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தினான் . துறைமுகத்தில் இருந்து கப்பலுக்குள் செல்ல இரும்பு தகடு பாலம் அமைக்க பட்டுள்ளது. பின்பு காரை நிறுத்தி விட்டு கப்பலின் உள்ளே சென்றோம். கப்பலின் அழகை கண்டோம். டெக் ஒன்று முதல் ஐயிந்து வரை உள்ள மிக பெரிய கப்பல் ஆகும் . ஒவ்வொரு மாடிக்கும் செல்ல லிப்ட் உண்டு. நாங்கள் எல்லா மாடிக்கும் சென்று கடலின் அழகை ரசித்தோம். வழியில் டால்பின் மற்றும் ஜெல்லி தென்பட்டது. நாங்கள் கப்பலில் எங்கள் காருடன் பயணம் செய்வது இதுவே முதன் முறையாகும். கப்பல் பற்றிய தகவல்களை அறிந்தோம், நாங்கள் அமெரிக்கா பயணத்தில் தான் விமானம் மற்றும் கப்பலில் பயணம் செய்யும் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. நாங்கள் நியூ ஜெர்சி வந்து சாலை மூலம் காரில் வீடு வந்து சேர்ந்தோம். எங்களது அடுத்த பயணம் விரைவில் தொடரும்.

July 4th Road ட்ரிப் - Part I!

Date: 3 .07.09 to 5.07.09 (3 days)

Places visited: Pittsburg, Luray Caverns, Skyline Drive, Virgenia Beach, Chesapeake Bay Bridge in Atlantic Ocean.

3.07.09 அன்று காலை ஆறுமணிக்கு புதிய நீல நிற வாடகை கார் எடுத்து முன்னுறு மைல் பயணம் செய்து பன்னிரண்டு மணி அளவில் Pittsburgh பெருமாள் கோவிலுக்கு சென்றோம். மிக பெரிய பிருமாண்டமான இக்கோவில் அமெரிக்கா வாழ்இந்தியர்களால் கட்டப்பட்டது. சிறப்பாக பெருமாள் தாயார் தர்சனம் செய்தோம். சிறு மலை மீது கார் செல்லும் பாதையுடன் உள்ளது. நேர்த்தியான வேலை பாடுடன் கோவில் கட்டப்பட்டுள்ளது. தற்போது பாலாலயம் செய்துள்ளார்கள். கோவிலில் உள்ள காண்டீனில் சாம்பார் சாதம் , புளியோதரை , தயிர் சாதம் , லட்டு உப்புமா ஆகியவை வாங்கி சாப்பிட்டோம்.

பின்பு pittsburgh நகரத்தில் உள்ள ரோப் ரயில் இல் பயணம் செய்தோம் இது மலை உச்சிக்கு செல்கிறது இங்க இருந்து பார்தால் நகரின் முழு தோற்றம் நன்கு தெரியும் . பிறகு நாங்கள் ஹோட்டல் ஷெரிடன் ஒன்பதாவது மாடியில் தங்கினோம். எல்லா வசதிகளுடன் எங்கள் ரூம் மிக சிறப்பாக இருந்தது. இந்த ஹோட்டல் அறையில் இருந்து பார்த்தால் அருகில் ஓடும் நதி, அதில் செல்லும் படகுகள், கப்பல்கள், ஓவர் பிரிட்ஜ் , ரயில்வே ஸ்டேஷன், மற்றும் மிக பெரிய கட்டிடங்கள் , மலை ஆகியவை மிக நன்கு தெரிகிறது.

மாலையில் எங்கள் காரில் சென்று படகு துறை, வண்ண நீருற்று, பூங்காக்கள் , உயரமான கட்டிடங்கள், ஆகியவற்றை கண்டு களித்தோம். இந்த இடத்தில் மூன்று ஆறுகள் ஒன்றாக கலந்து ஓடுகிறது. இதற்கு Golden Triangle i.e. Allegheny river, Monongahela River, Ohio River என்று பெயர். அன்று இரவு அமெரிக்கா சுதந்தர தினத்தை முன்னிட்டு எட்டு மணிக்கு Nikwallenda என்ற சாதனை மனிதர் பொது மக்களின் முன்னிலையில் இரும்பு கம்பியை Allegheny River இல் இரு புறமும் இணைத்து நடந்து சாதனை புரிந்தார். இதை காண பல மக்கள் கூடி இருந்தார்கள்.

பல விதமான படகு போட்டிகள் நடை பெற்றது. இது கண்ணுக்கும் , மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் சிறந்த சுற்றுலா ஸ்தலமாகும். இந்த நகரம் ஒரு முறை வெள்ளத்தாலும் மற்றும் ஒரு முறை நெருப்பிலும் பாதிக்க பட்டுள்ளது. இருப்பினும் இதனை மீண்டும் சிறந்ததாக தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள பூங்காவில் மூன்று நாட்களாக ஆங்கில இசை நடை பெற்றது. நாங்கள் சென்ற சமயம் Bon The Bridge என்ற இசை குழுவினர் பாடி மகிழ்வித்தனர். மிகவும் நன்றாக இருந்தது. இரவில் மலையில் இருந்து பார்த்தால் நகர் முழுவதும் விளக்கு ஒளியில் பிரகாசிக்கிறது.

4.07.09 SKYLINE DRIVE:

இன்று காலை கிளம்பி சுமார் 120 மைல்கள் மலை மீது ஏறி வளைந்து வளைந்து சென்றோம். இது Skyline Drive என்று அழைக்கபடுகிறது. நாங்கள் காரில் இதனை கண்டோம்.விண்ணை தொடும் மரங்கள் , பல்வேறு நீர் விழுச்சிஎன இக்காட்டு மலை பிரதேசம் வழி நெடுக காட்சி தருகிறது.

நாங்கள் சுமார் ஐயிந்து மணி நேரம் இந்த மலையில் பிரயாணம் செய்தோம். பல அதிசயங்களை கண்டோம். வழியில் பல மான்களை கண்டோம். இதனைதொடர்ந்து பாதி வழியில் LURAY CAVERNS என்ற மலையில் பல வித ரசாயன மாற்றங்களினால் பல்வேறு வடிவங்களில் சுரங்க பாதையில் பூமிக்கு அடியில் சுமார் ஒன்றரை மைல் சுற்றளவு உள்ள இந்த அழகிய இடத்தில் பாறைகள் நிறைந்து காணபடுகின்றன. பல கோடி கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தண்ணீர் சொட்டி சொட்டி ,இப்பாறைகள் , சில வடிவங்களில் தோற்றம் அளிக்கிறது.

இதனை அழகுற அமைத்து, விளக்கொளி ஏற்பாடு செய்து காண்பிக்கின்றனர். உள்ளே செல்லும் போது நம்மிடம் ஒரு mp 3 player with head phone கொடுத்து விடுகின்றனர். இதில் நம்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.. நாம் காணும் இடங்களிலும் நம்பர் உள்ளது. நாம் பார்க்கும் இடம் வந்த உடன் நம்பரை அமுக்கியவுடன் அந்த இடம் பற்றிய தொகுப்புரையை நம் காதில் உள்ள கருவி மூலம் அறிந்து கொள்ளலாம் . அதே போல் பதினேழு இடங்களில் காட்சிகள் உண்டு, நாமே இவற்றை பற்றி விவரமாக அறிய இக்கருவி பயன் படுகிறது.

குழந்தைகள் அறிய அதற்கு ஏற்றவாறு அக்கருவியில் மழலை மொழியில் அழகான புரியும் விதத்தில் ஆங்கில தொகுப்பும் உள்ளது... இதற்கு தனி நம்பெர் உண்டு. நாங்கள் இதனையும் கேட்டு ரசித்தோம். பின்பு அருகே உள்ள அருங்காட்சியகம் சென்று பல கால கட்டங்களில் இருந்த காரின் மாடெல்கள் மற்றும் அதன் வளர்ச்சியையும் கண்டோம். பின்பு மாலை மீண்டும் அதே மலையில் அறுபது மைல்கள் பயணம் செய்தோம். அந்த மலையில் குறுக்கே நடை பாதை உண்டு. சுமார் இரண்டாயிரம் மைல் நடை பயணமாக பாஸ்டன் நகரின் எல்லை வரை செல்கிறது. இந்த நடை பயணத்தை ஆண்டிற்கு 150 பேர் மேற்கொண்டு சாதனை புரிகின்றனர். இதற்க்கு APPALACHIAN TRIAL என்று பெயர்.

இக்காட்டில் பல மிருகங்கள் உண்டு . நாங்கள் இவற்றை கண்டு பின் இந்த மலையின் அதிக உயரமான 3680 feet Highest point on drive elevation top of height என்ற அறிவிப்பு பலகையை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து கொண்டு கீழே இறங்கினோம். .அன்று இரவு New port news என்ற நகரில் சூப்பர் எட்டு என்ற ஹோடேலில் தங்கினோம்.

(தொடரும்...)

Monday, July 13, 2009

Philadelphia!

HISTORIC PHILADELPHIA

July 8th 1773 இன்று பிரிட்டிஷ் அரசிடமிருந்து அமெரிக்கா சுதந்திரம் பெற்ற தினம். இந்த வரலாற்று சம்பவம் இங்கு தான் நடை பெற்றது. ஜார்ஜ் வாஷிங்டன் முதல அதிபர் ஆவார். பின்னர் வாஷிங்டன் D C. க்கு தலை நகரம் மாற்றி அமைக்க பட்டது. எனினும் இங்கு தான் சுதந்திர போராட்டம் வலு பெற்றது. பெஞ்சமின் பிராங்க்ளின் போன்ற அறிஞர்களை பெற்ற இடம்.

இங்கு ராணுவ வீரர்களின் கல்லறை , பழங்கால அமெரிக்கர்கள் வாழ்ந்த வீடு ,மற்றும் அனைத்து தேச கொடிகளும் உள்ள வீதி , அமெரிக்கா பணம் தயாரிக்கும் இடம் என பல்வேறு சிறப்பு கட்டிடங்கள் மற்றும் நினவு சின்னங்களையும் காணலாம். இங்கு மிக பெரிய டெலாவர் ஆறு ஓடுகிறது. நிறைய படகு சவாரி காணலாம்.

இங்கு லிபெர்ட்டி பெல் என்ற மிக பெரிய மணி உடைந்த நிலையில் பாதுகாப்பாக வைக்க பட்டுள்ளது. இது முதன் முதலில் சுதந்திரம் பெற்றவுடன் அடிக்க பட்டபோது உடைந்தது.

மிக பெரிய உயரமான கட்டிடங்களை கொண்ட நகரம் ஆகும். COMCAST என்ற மிக உயரமான 80 மாடி கட்டிடத்தில் உலகிலேயே மிக பெரிய திரை (big screen in the world) உள்ளது. இதில் வித விதமான பட காட்சி நாள் முழுவதும் காண்பிக்க படுகிறது. மிகவும் சிறப்பாக உள்ளது. இலவசமாக பொது மக்கள் பார்க்கலாம் . நுழைவு கட்டணம் கிடையாது.

நீங்கள் கண்டு காண ஒரு சிறிய பட தொகுப்பு:

RIDE THE DUCKS BY LAND AND SEA என்ற பஸ்ஸில் நகரம் முழுவதும் சுற்றி பார்த்தோம். பின்பு அதே பஸ் டெலவர் நதியில் கப்பல் போல சென்றது. நீரிலும் நிலத்திலும் செல்லும் வண்ணம் வடிவமைக்க பெற்ற பஸ்ஸில் நாங்கள் பயணித்தோம். உண்மையில் நாங்கள் இந்த அதிசயத்தை உணர்ந்தோம். இது எங்களுக்கு முதல் அனுபவம் ஆகும்.

Besty Rose House என்ற கட்டிடத்தை கண்டோம். Besty என்ற மனிதர் முதன் முதலில் அமெரிக்கா கொடி யை வடிவமைத்து தயாரித்தவர் ஆவார் .மொத்தம் இருபது இடங்களையும் பஸ் மூலம் பார்வை இட்டோம். பின்பு எங்கள் காரில் நகர் முழுவதும் வலம் வந்து பல கோணங்களில் புகைப்படம் எடுத்து மகிழ்வுடன் இல்லம் திரும்பினோம்.

Wedding Anniversary!

இன்று எங்கள் திருமண நாள், 32 ஆண்டுகள் பூர்த்தி ஆகிறது. எங்களது திருமண நாளை போன ஆண்டில் சென்னையில் அருணுடன் கொண்டாடினோம். அல்டோ காரில் திருக்கடையூர், கும்பகோணம் உப்ப்லியப்பன்கோவில் சென்று வந்தோம்.இந்த ஆண்டு அமெரிக்காவில் எண்கள் திரு மணநாளை அருணுடன் கொண்டாடுகிறோம். அருண் எங்களுக்கு திருமண நாள் பரிசு கொடுத்தான்.

திருமண வாழ்த்துஅட்டை,டிரில்லிங்மிஷன், மற்றும் கண்ணாடி டம்ளர் செட் பரிசு அளித்தான் . நாங்கள் அவனை வாழ்தினோம். மாலை நூறு மைல்தொலைவு உள்ள நியூ ஜெர்சி பிரிட்ஜ் வாட்டர் ஸ்ரீ வெங்கடேஸ்வர கோவில் சென்றோம். நாங்கள் சென்ற நேரம் தீப ஆராதனை நடை பெற்றது. சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது.

இங்கு சிவன், பார்வதி, முருகர், வள்ளி தேவானை ,ராமர், அனுமான், நவக்ரகங்கள் , ஐயப்பன் உட்பட அனேக தெய்வங்களும் சிறப்பான அலங்காரத்துடன் காணப்பட்டது, இங்கு பெருமாள் பாலாஜி நல்ல ஆபரணம், மற்றும் பல விதமான பூ அலங்காரத்துடன் கண்ணை கவரும் வண்ணம் காட்சி அளித்தார். இங்கு வெள்ளியில் ரிஷபம், யானை, கருடன், ஆதிசேஷன், மயில் மூஞ்சூர் ஆகிய வாகனங்கள் கலை நுணுக்கத்துடன் மிக சிறப்பாக பளபளப்புடன் காண பட்டது. இங்கு மோட்டார் வாகனங்களுக்கு பூஜை செய்ய தனி இடம் உண்டு. அருண் காருக்கு இங்கு தான் பூஜை செய்துள்ளான்.

பின்பு நாங்கள் அங்குள்ள சரவணா பவன் ஹோட்டலுக்கு சென்று சென்னை போலவே சுவையான உணவு சாப்பிட்டு வீடு திரும்பினோம். அமெரிக்காவில் திருமண நாள் மறக்க முடியாத சிறந்த நாளாக இருந்தது.

Tuesday, July 7, 2009

BUSHKILL FALLS ( THE NIAGARA OF PENNSYLVANIA)

21.06.09 sunday Fathers Day

அமெரிக்காவில் இந்நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இதன் பொருட்டு கடை மற்றும் ஹோடேல்களில் சிறப்பு தள்ளுபடி கொடுக்கிறர்கள். சிறு கிராமங்களில் கூட சந்தை கூடுகிறது. துணி முதல் பல்வேறு பொருட்களும் சலுகை விலையில் விற்பனை செய்கிறார்கள். இந்த விழாவை கொண்டாடும் பொருட்டு அருண் எனக்கு நீல நிற டி ஷர்ட்a வாங்கி கொடுத்தான். மற்றும் Bushkill Falls என்ற இடத்திற்கு அழைத்து சென்றான்.

சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பூர்வீக அமெரிக்க குடி மக்கள் இங்கு குடியேரி சிறிது சிறுதாக முன்னேற்றம் அடைய செய்தனர். இன்று உலகம் போற்றும் சிறந்த சுற்றுலா மையமாக இருக்கிறது. அனேக பூங்காக்கள், படகு துறைகள், படகு சவாரி, சிறுவர் பூங்கா என பல்வேறு இடங்கள் நிறைந்து காண படுகிறது. இங்கு ஹோடேலில் சுவையான உணவு சுடசுட தயாரித்து தருகிறார்கள்.

மிக பெரிய அடர்ந்த காட்டில் மூன்று மைல் தொலைவு சென்றோம். சுமார் பன்னிரண்டு அருவிகள் அடர்ந்த மலையில் இருந்து வெவேறு வடிவங்களில் கொட்டுகிறது. சில அருவியை காண மரம் படிக்கட்டுகள் உண்டு. சில இடங்களில் உள்ள அருவிக்கு செல்ல அடர்ந்த காடுகளுக்குள் செல்ல வேண்டும். வழியில் பறவைகள், மான்கள், மிக பெரிய விண்ணை தொடும் மரங்கள், சிறு கோடு போன்ற நதி இவைகள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தினாலும் சிறப்பான இயற்கை காட்சிகள் மனதிற்கு ரம்மியமானதாக இருக்கிறது.

இந்த காடுகள் பனி காலத்திலும் வெய்யில் காலத்திலும் வெவேறு வடிவாங்களில் காண படும். இதில் Main Falls, Bridal Falls, Bride Maid Falls என்றர் மூன்று அருவிகளும் அடுத்து அடுத்து பக்கத்தில் கொட்டுவது சிறப்பு அம்சமாகும். இந்த காட்டில் சென்று வர மூன்று வழிகள் உண்டு. நாங்கள் பெருவழி பாதையை தேர்வு செய்தோம். (Long distance). இந்த பாதை சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவு ஆகும். இதை வரைபடம் மூலம் மஞ்சள், சிகப்பு, பச்சை என மூன்று வண்ணங்களில் குறித்து வைத்துள்ளார்கள். நம் தேவைகேற்றபடி வண்ணங்கள் தேர்ந்து எடுத்து நம் விருப்பப்படி செல்லலாம். நாங்கள் சிவப்பு வண்ண பாதையை தேர்வு செய்து அதிக தூரம் சென்றோம். அங்கங்கு மரத்தில் சிவப்பு வண்ணத்தை பார்த்து அதன்படி அந்த பாதையில் சென்றோம். இல்லாவிடில் வழி தவறி காட்டுக்குள் சென்று விடும். யாரையும் விசாரிக்காமல் வண்ணதின்படிசரியான பாதையில் செல்லலாம்.
இங்கு வெளியே வரும் போதுபலவித காட்டுமிருகங்களின் இறந்த உடலை பாடம் செய்து காட்சிக்குவைத்துள்ளார்கள். பறைவைகள் மற்றும் மான் தத்ருபமாக தெரிகிறது. இதன். நுழைவு கட்டணம் 10 $ . இது எங்கள் இடத்தில் இருந்து நூறு மைல் தொலைவில் உள்ள சிறந்த சுற்றுலா மையம் ஆகும். பயண நேரம் இரண்டு மணி ஆகும்.
பார்த்தோம் மகிழ்ந்தோம்!

Monday, July 6, 2009

WASHINGTON D. C.

13.06.09 SATURDAY

இன்று காரில் கிளம்பி வாஷிங்டன் நகரை காண சென்றோம். எங்கள் காரை யூனியன் ஸ்டேஷன் என்ற உலகில் மிக நேர்த்தியான மற்றும் தொன்மையான ரயில் நிலையத்தில் உள்ள ஐந்தாவது மாடியில் காரை நிறுத்தி விட்டு லிப்ட் மூலம் கீழே வந்தோம் . இந்த ரயில் நிலையத்தில் Postal museum, American memorial, shops, restaurants, ஆகியவை உள்ளன. கட்டிட கலையில் சிறந்த இந்த ரயில் நிலையம் பார்வையாளர்களையும் சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கின்றது.

இங்கிருந்து பஸ்கள் அனைத்து இடங்களுக்கும் செல்கின்றது. மிக நேர்த்தியாக பராமரிக்க படுகிறது. தவிர விமான நிலையத்தில் நம் உடமைகளை பெறுவது போல இந்த ரயில் நிலையத்தின் வாசல் வரை Baggage carousel மூலம் நாம் நம் உடைமைகளை பெற்று செல்லலாம் . இது மிகவும் சிறப்பான முறையாகும். இதனை கண்டு ரசித்து பின்பு வெளியே வந்து நாங்கள் Open top sight seeing bus (bottom aircondition and top open என) அழகாக வடிவமைக்கப்பட்ட பஸ் மூலம் முப்பது இடங்களை பார்வையிட்டோம். இதில் வெள்ளை மாளிகை குறிப்பட தக்கது!

National Air and Space Museum

இங்கு ஆரம்பம் முதல் இன்று வரை உள்ள விமானம் சம்பந்தமான காட்சிகள், படங்கள், சினிமா என வியக்கும் வண்ணம் வடிவமைத்து இருக்கிறார்கள். மிக பெரிய அருங்காட்சியகம் ஆகும். பல்வேறு கால கட்டங்கள்கடந்து வந்த ராணுவ விமானம் முதலில் ரைட் சகோதரர்கள் தயாரித்த விமானம் பார்த்தோம்.

சந்தரினில் இருந்து கொண்டு வரப்பட்ட கல் மண் போன்றவை பார்வைக்கு வைக்க பட்டுள்ளது .சமிபத்தில் விண்வெளியில் ராக்கெட்டில் காலமான இந்திய விண்வெளி ஆராய்ச்சி பெண்மணி கல்பனா சாவ்லா பயணம் செய்த ராக்கெட்டின் மாதிரி உள்ளது. Neil Armstrong நிலவில் காலடி வைத்த படம், space shuttle, அப்போலோ விண்வெளி கலம் (சந்திரனில் முதலில் இறங்கிய விண்வெளி கலம்) இவற்றின் புகை படம் வைத்து இருக்கின்றனர். விமானம் உள்ளே உள்ள அனைத்து சாதனம், ம்ற்றும் காக்பிட் இல் அமர்ந்து பார்க்கலாம். இதுபோல் பல காட்சிகண்டோம் பின்பு இரண்டு சினிமாக்கள் பார்த்தோம். இதுவும் அங்கேயே உள்ளது. IMAX Theater "To Fly" என்ற படம் பார்த்தோம்.

இது என்னை கவர்ந்த இரண்டாவது அமெரிக்கா படம் ஆகும். முதன் முதலில் மனிதன் எவ்வாறு நடந்து, குதிரை, மோட்டார் வாகனம், ரயில் பின்னர் விமானம் ராக்கெட் என பயணம் செய்வது குறித்த படம். இது பலூனில் பறப்பது முதல் Hang Gliding வரை பலவித சிலிர்க்க வைக்கும் வியப்புறும்காட்சிகள் அனிமேஷன் கலந்து தயாரித்து உள்ளனர்.

படம் பார்க்கும்போது நாம் அங்கேயே செல்வது போலவும், ரயில் நம் மீது மோதுவது போலவும் , விமானத்தில் பறப்பது போலவும் காட்சிகள் மனதில் பதிவு ஆவதுடன் நம்மையே மறக்க செய்கிறது. இவ்வளவு பெரிய திரையை நான் கண்டதே இல்லை. இந்த திரை அரங்கில் ஐந்து மாடி முழுவதும் அமர்ந்து இந்த பெரிய திரையில் படம் பார்கிறார்கள்;

நாங்கள் இதே இடத்தில் உள்ள இருபத்து மூன்று நிமிடங்கள் ஓடும் DIGITAL DOME TECHNOLOGY COSMIC COLLISIONS A 23 Minute digital dome experience என்ற சிறப்பான கோள்கள் பற்றிய படம் பார்த்தோம். வியக்கும் வண்ணம் உள்ளது. சூரியன் மற்றும் இதர கோள்கள் அதன் ரசாயன மாற்றங்கள் அதனால் உண்டாகும் விளைவுகள் பற்றிய படமாகும்.

மன நிறைவுடன் வீடு திரும்பினோம்.

Tuesday, June 23, 2009

Longwood Gardens!

A World premier Horticultrial Show Place.

1906- ஆம் ஆண்டு போது 1050 ஏக்கர் பரப்பளவு உள்ள இடத்தை மரங்களை வெட்டி அழிக்க முற்படும் போது சமூக நல ஆர்வலர் Mr.Peirce S. Dupont என்ற இவர் இந்த இடத்தை வாங்கி மிக சிறந்த மரம், பூ, காய் தோட்டமாக வடிவமைத்து உள்ளார். இவர் பல வெளிநாடுகளில் இருந்து பல்வேறு தாவரங்கள் பெற்று சீனா, தாய்லாந்து, ஜப்பான் ஆகிய நாடுகளில் இருந்து செடிகள் , மரங்கள் பெற்று ஆராய்ச்சி செய்து சிறப்புடன் நன்கு வடிவமைக்க பட்டு உருவாக்கி உள்ளார். இது Bonsai display, small lake, chimes tower, rose garden, eye of water, flower garden walk, open air theatre, italian water garden, terrace restaurent, main fountain garden, peirce du pont house, peirces wood house ,Topiary garden, water lilly display, idea கார்டன் என பல இடங்களை தாங்கி உள்ளது.

இதில் ரோஜா தோட்டம் மனதை கொள்ளை கொள்ளுகிறது. பெரிய பெரிய ரோஜாக்கள் பல நிறங்களில் பெரிய செம்பருத்தி பூக்கள் சிறப்பாக உள்ளது. இங்குள்ள காட்டில் பெரிய பெரிய மரங்கள் உண்டு. இங்கு சிறுவர்களுக்காக சிறப்பு பூங்கா உண்டு. சிறுவர்களுக்கு புத்தகம் தருகிறார்கள். மற்றும் கண் போன்ற அமைப்புடன் தண்ணீர் வழிந்து பிறகு பெரிய அருவியாக மாறி கிழே விழுகிறது.

இங்கு முதியவர்களுக்கு கட்டண சலுகை உண்டு. அவர்கள் பூங்காவை சுற்றி வர பேட்டரி வாகன வசதி உண்டு. இங்கு நிறைய அருவிகள் உண்டு. பெரிய அருவியை தாண்டி வந்தால் பௌண்டன் ஷோ நடை பெறுகிறது.

இதுவாரத்தில் மூன்று நாட்கள் நடை பெறுகிறது. இது மிகவும் சிறப்பான காட்சிஎன கருத படுகிறது. இது பல்வேறு இசை கேற்ப பல வண்ண விளக்குகளில் மேலும் கீழும் வந்து நடனம் ஆடுகிறது . இந்த காட்சியை காண பல மக்கள் வருகின்றனர்.

இங்கு நாலு ஏக்கர் பரப்பளவில் இருபது அறைகளில் பிருமாண்டமான கண்ணாடி இல்லம் (green house) உள்ளது. இரவில் வண்ண மயமான பூந்தோட்டம் விளக்கு ஒளியில் காணபடுகிறது. இது பகலில் வேறு விதமாக தெரிகிறது. மிக பெரிய பரப்பளவில் உள்ள புல்வெளி சிறப்பாக காட்சி அளிக்கிறது. இது மனதை மகிழ் விக்கிறது. இங்குள்ள பூக்கள், மரங்கள், இலைகள் பருவ கால மாறுதலுக்கு ஏற்ப நிறங்களில் மாறுபாடு தெரியும் . இதற்கான நுழைவு கட்டணம் பதினாறு டாலர் ஆகும்.

கண்டோம் களித்தோம். EVANS BURG STATE PARK IN PENNSYLVANIA

இது எங்கள் இல்லத்தில் இருந்து ஆறு மைல் தொலைவு உள்ளது. இது வெளியில் சுற்றுலா செல்பவர்களுக்கு சிறந்த சொர்க்க பூமியாக உள்ளது. (Pensilvania in an outdoor lovers paradise) இது சுமார் இரண்டு மில்லியன் ஏக்கர் பரப்பளவுள்ள அழகான , கண்டு மகிழ , வேட்டையாட , சைக்கிள் ஓட்ட , மீன் பிடிக்க, கால்ப் விளையாட , குதிரை சவாரி என பல்வேறு அம்சங்களையும் தன்னிடத்தில் கொண்டுள்ளது.

சுமார் முன்னுறு ஆண்டுகள் பழைமை யான இந்த இடம் தற்போது ( D C N R) dept. of conservation and national resources என்ற அமைப்பின் மூலம் பராமரிக்க படுகிறது. இங்கு உயிர் காட்சி சாலை உண்டு. இது முன்னாள் அமெரிக்கர்கள் கை மாறி, மாறி விற்று தற்போது அமெரிக்கா அரசு பராமரிக்கிறது. இந்த பூங்காவை சுற்றி பல மைல் தொலைவிற்கு பல கிராமங்கள் உள்ளன. இங்கு பல வீடுகளும் உள்ளன. இரவில் பயங்கர அமைதி. நாய் மற்றும் குதிரை துணையுடன் மனிதர்கள் தனி தனி வீட்டில் வசிக்கிறார்கள் .இந்த காட்டில் சில விஷ செடிகள் (poison ivy) உண்டு. இவை நம் மீது பட்டால் அரிப்பு உண்டாகும். இது குறித்து அறிவிப்பு பலகை உள்ளது.

இங்கு முன்னுறு ஆண்டுகள் பழைமை ஆனா பைன் மரங்கள் நிறைய காணபடுகிறது. இந்த காட்டில் கழுகு, கரடி, மான், முயல் அணில் ஆகியவை உண்டு. சில இடங்களில் மட்டும் வேட்டையாட அனுமதி உண்டு. இதை நாங்கள் கண்டு ரசித்தோம்.

Up - 3D movie!

அமெரிக்காவில் நாங்கள் பார்த்த முதல் அங்கில படம் 'UP' (3D).

இன்று மாலை அருண் வீட்டுற்கு வந்த பின் நாங்கள் கர்ரில் சினிமா காண ஏழுமணிக்கு சென்றோம். பத்துநிமிட பயணத்தில் சினிமா அரங்கம் சென்று விட்டோம் இந்த இடம் PLYMOUTH என்று அழைக்க படுகிறது. இங்கு இரண்டு சினிமா அரங்கம் உண்டு . ஒன்றில் நாமே கிரெடிட் கார்டு மூலம் டிக்கெட் பெற்று படம் பார்க்கலாம் . மற்றுமொன்றில் ஆட்கள் டிக்கெட் கொடுக்கிறார்கள்.

நாங்கள் 3 D UP என்ற படம் பார்த்தோம் மிகவும் நன்றாக இருந்தது .

இது 73 வயது பெரியவரும் 7 வயது சிறுவனும் செய்யும் சாகசங்கள் , சாதனை புரியும் சிறுவன் , பெரியவரின் அனுபவம் , வழியில் அவர்கள் சந்திக்கும் சவால்கள் என படம் விறுவிறுப்பாக மற்றும் பிரமிக்க வைக்கும் காட்சிகளுடன் இருந்தது. இது Disneyland animation 3 D cinema , 3 D கண்ணாடி அணிந்து படம் பார்க்க வேண்டும்.

பிரமாண்டமான அனிமேஷன் காட்சிகள் மனதை கொள்ளை கொள்ளுகிறது . சிறுவர்கள் அதிக அளவில் அரங்கில் காண பட்டனர். மொத்தம் ஒரு மணி முப்பது நிமிடம் படம் இடைவேளை இன்றி ஓடுகிறது . ஒரு நபர் டிக்கெட் 14 $..மன நிறைவுடன் வீடு திரும்பினோம்.

Wednesday, June 17, 2009

Baltimore Aquarium and Siva Vishnu Temple

NATIONAL AQUARIUM, BALTIMORE, MARYLAND:

இதுமிக பெரிய மீன் அருங்காட்சியகம் ஆகும். இதனை ஐந்து பகுதிகளாக பிரித்து, தண்ணிரின் நடுவே ஐந்து நிலைகளில் உள்ள escalator மூலம் ஒவ்வொரு மாடியையும் கடந்து மேலே சென்று பல நிலைகளில் உள்ள நீர் வாழ் உயிரினங்களையும் காணலாம். அவைகளை பற்றி பல குறிப்புகளை எழுதி வைத்துள்ளனர். அந்த அருங்காட்சியை காண அதிக நேரம் தேவை.

Level 1: Wings in the water

Level 2: Maryland Mountain to the Sea

Level 3: Surviving through Adaptation

Level 4: Sea cliffs, kelp forest, Pacific coral reef, Amazon river forest

Level 5: Upland Tropical Rain Forest hidden life

'என பிரித்துள்ளனர்.

இவைகளில் என்னை கவர்ந்தவை 4 D IMMERSION THEATRE. இதில் ஒலி ஒளீ அமைப்பு முற்றிலும் மாறுபட்டது. நம் மீது தண்ணீர் தெளிப்பது போலவும், முதலை நம் காலை தொடுவது, முதுகில் பாம்பு குத்துவது போலவும் மிகவும் தத்ரூபமாக உள்ளது. என் வாழ்நாளில் இது முதல் அனுபவம் ஆகும். இந்த சிறப்பு காட்சி 15 நிமிடங்கள் நம்மை பிரமிக்க வைக்கிறது. (Special Sensory Effect, such as Mist, Wind,etc.). வேறு எங்கும் காண முடியாது.

பின்பு டால்பின் செய்யும் வீர சாகச விளையாட்டை முப்பது நிமிடங்கள் கண்டு களித்தோம். இசைகேற்ப டால்பின்கள் நடனமாடுகின்றன. பந்து விளையாடுகிறது. மிக உயரே எம்பி குதிக்கிறது.நம் மீது நீர் தெளிக்கிறது.இதற்கு தனி கட்டணம் உண்டு.

அடுத்ததாக ஜெல்லி என்ற அபூர்வமான மீன் வகை கலர் கலராக கண்ணுக்கு விருந்து அளிக்கிறது . இதை தவிர சுறா மீன்கள் குண்டு, தட்டை என பல உருவ வேறுபாடுகளில் காட்சி அளிக்கிறது . இவை அனைத்தும் நன்கு பராமரிக்க படுகிறது.

சிவா விஷ்ணு கோவில் (LANHAM) :

நாங்கள் அமெரிக்க பயணத்தில் முதலில் பார்த்த கோவில் இது ஆகும். சனி கிழைமை பாலாஜி தர்சனம் நல்ல சிறப்பான ரோஜா மலர்கள், மாலைகள், என அலங்காரத்துடன் காண பெற்றோம். மற்றும், ஸ்ரீ விநாயகர், துர்க்கை, ராமர், அவர் மடியில் சீதை அமர்ந்த கோலம், மற்றும் லக்ஷ்மணர் , நவக்ரகங்கள் , பள்ளிகொண்ட நிலையில் பெருமாள், வீணை சரஸ்வதி, லக்ஷ்மி, ராமநாத சுவாமி, பார்வதி, ஆஞ்சநேயர், நரசிம்மர், சுதர்சனர் மற்றும் ஐயப்பன், என பல சன்னதிகள் உள்ளன.

இங்கு அமெரிக்கா பாணியிலேயே கோவில் நன்கு சிறப்பாக பராமரிக்க படுகிறது . இங்கு பிரசாதம் விற்கும் இடத்தில் இட்லி சாம்பார், புளியோதரை, சாம்பார் சாதம், தயிர் சாதம், முறுக்கு , தட்டை ஆகியவை விலைக்கு கொடுக்கிறார்கள். இங்கு மகர சங்கராந்தி அன்று இருமுடி கட்டி பதினெட்டாம்படி ஏறி ஐயப்பனை வணங்குகிறார்கள். கோவிலுக்கு ரோஜா மலர் தோட்டம் உள்ளது.

அன்று மாலை மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினோம்!

Tuesday, June 16, 2009

நயகரா மற்றும் ஆயிரம் தீவுகள்!

சுற்றுலா நாள் : மே 22, 23, 24 May 22: அன்று மாலை 6 மணி அளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு, சுமார் நடு இரவு 1 மணிக்கு ஆயிரம் தீவுகள் (செயின்ட் லாரன்சே நதியில் உள்ளது) என்ற இடத்தை சென்றடைந்தோம். அன்று இரவு ஒரு காரவனில் தங்கினோம். இது மிகவும் புதிய அனுபவம். இரு குடும்பங்கள் தங்கும் அளவிற்கு வசதிகள் உள்ளன. இதில் இரு படுக்கை அறைகள், குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி பெட்டி, ஓவன், சுடுநீர் வசதி, சமையல் பாத்திரங்கள், சோபா செட், டைனிங் டேபிள், தொலைபேசி, குளியல் அறை, கடிகாரம் போன்ற அனைத்தும் உள்ளன. இது போன்று நிறைய காரவன் உள்ளது .(RECRCATION VEHICLE) இதில் இரு இரவுகள் தங்கினோம். அருண் internet மூலம் முன்பதிவு செய்திருந்ததால், campground'இல் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட caravan பூட்டபடாமலும், அதன் உள்ளே இருக்கும் மேஜையில் சாவியும் காத்திருந்தது. vacate செய்யும் போதும் சாவியை மேஜை மீது வைத்து விட்டு கிளம்பினோம். நம்பிக்கைக்கு இந்த நாட்டு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

ஆயிரம் தீவுகள் என்ற இடம் பல ஆயிரகணக்கான தீவுகள் அடங்கியது. புகழ் பெற்ற நயாகரா நீர்விழ்சிக்கு செல்கிறது. நாங்கள் இத்தீவில் இயந்ததிரபடகு மூலம் எல்லா இடங்களையும் பலமணி நேரம் பார்த்து ரசித்தோம். அருண் படகை வரைபட உதவியுடன் இயக்கினான். நானும் உமாவும் படகை ஓட்டினோம்.

May 23: இன்று, நாங்கள் காரில் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி காண சென்றோம். சாலைகள் நன்றாக பராமரிக்க படுகிறது. கார் நிறுத்த அஞ்சு அடுக்கு மாடி கட்டிடத்தில் வுள்ள கார் நிறுத்தும் இடத்தில் விட்டு விட்டு லிப்ட் மூலம் கீழே வந்தோம். இந்த நீர்விழுச்சி 1885 முதல பராமரிக்க படுகிறது. அருவீ காண நீல நிறமுள்ள பெரிய maid of the mist என்ற கப்பலில் நீல நிற உடை அணிந்து அருகில் சென்றோம்.

இந்த அருவி மிகவும் பிரமாண்டமாக வுள்ளது. இது கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களிலிருந்து அஞ்சு ஆறுகளாக வந்து ஒன்று சேர்ந்து மிக அகலமாக பல பிரிவுகளாக கொட்டுகிறது . இங்கிருந்து பார்த்தால் கனடாவில் உள்ள மிக பிரமாண்டமான கட்டங்களை காணலாம். கனடாவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் ரெயின்போ பாலம் இங்கிருந்து காணலாம். நாங்கள் பல கோணங்களில் கண்டு களித்தோம். இந்த பாலம் இரு நாடுகளால் பராமரிக்க படுகிறது.

அங்கு பல பூங்காக்கள் கண்டு களித்தோம். இரவில் பல வண்ண விளக்குகளால் இந்த அருவி அலங்கரிக்க படுகிறது. இது கண்ணை கவரும் காட்சியாக யுள்ளது. அன்று இரவு நடைபெற்ற வானவேடிக்கை பார்த்து ரசித்தோம். அன்று விடுமுறை என்பதால் அந்த சிறப்பு காட்சி காணும் வாய்ப்பு கிடைத்தது. அன்று இரவு BUFFALO என்ற இடத்தில் தங்கினோம்.

May 24: இன்று காலை புறப்பட்டு லேட்ச்வோர்த் ஸ்டேட் பார்க் (Letchworth state park, famously called as 'Grand Canyon of the east') என்ற பூங்காவுக்கு வந்தோம் .இது 10 மைல் சுற்றளவுள்ள மிகப்பெரிய பூங்காவாகும். இது பல்வேறு நீர்விழுச்சி மற்றும் ஆறுகள், விண்ணை தொடும் மரங்கள் என 14350 ஏக்கர் பரப்பளவில் உள்ள மிக பெரிய பூங்காவாகும். இதனை கண்டு களிக்க நேர்த்தியான தார் சாலைகள் உண்டு! நுழைவு கட்டணம் 25 டாலர். அதன் பிறகு, உலக புகழ் பெற்ற Corning museum of Glass சென்றடைந்தோம். இங்கு பல்வேறு விதங்களில் அலங்காரமான கண்ணாடி குவளை, தட்டுகள், ஆபரணங்கள் போன்ற புகழ் பெற்ற கண்ணாடி தயாரிப்புகளை ஒரே இடத்தில் காண முடிகிறது. ஹாட் கிளாஸ் ஷோ (HOT GLASS SHOW) கண்டு களித்தோம். அதில் கண்ணாடி உருக்கி ஜாடி செய்வதை நேரில் செய்து காண்பித்தனர். அதை பார்த்து விட்டு வீடு திரும்பினோம். அமெரிக்கா வந்து சேர்ந்த முதல் வாரத்தில் எங்களுக்கு கிடைத்த சுகமான அனுபவமாக இந்த பயணம் அமைந்தது! நயாகரா நீர்வீழ்ச்சியின் அழகும் பிரம்மாண்டமும் எங்கள் மனதை விட்டு விலக மறுக்கிறது!

Tuesday, June 9, 2009

வணக்கம்!

அனைவருக்கும் எனது வணக்கங்கள்! இது நாள் வரை எனது பயண அனுபவங்களை என் குறிபேடுகளில் எழுதி வந்த நான், இன்று முதல் எனது அனுபவங்களை இந்த வலைபதிவில் எழுத முற்படுகிறேன். இந்தியாவில் இமயம் முதல் குமரி வரை உள்ள வரலாற்று சிறப்பு வாய்ந்த மற்றும் ஆன்மீக தொடர்பு உடைய பல்வேறு இடங்களை காணும் பேறு பெற்றுள்ளேன். மிக குறிப்பாக என் மனைவியுடன் கேதார்நாத், பத்ரிநாத் போன்ற ஸ்தலங்கள் மற்றும் பன்னிரண்டு ஜோதிர் லிங்க க்ஷேத்திரங்களையும் தரிசிக்கும் வாய்ப்பினை பெற்றுள்ளேன். அண்மையில், தனியே நேபால் வரை சென்று பசுபதிநாத் கோவிலும், இமய மலை சிகரத்தையும் கண்டு களித்துள்ளேன். தற்போது எனது மனைவியுடன் எனது மகனை காண அமெரிக்கா வந்துள்ளேன். இங்கு நான் காணும் இடங்களை பற்றியும், எனது அனுபவங்களையும் இந்த வலைபதிவில் எழுத முற்படுகிறேன். விரைவில், "என் பார்வையில் அமெரிக்கா"....!