Monday, July 13, 2009

Wedding Anniversary!

இன்று எங்கள் திருமண நாள், 32 ஆண்டுகள் பூர்த்தி ஆகிறது. எங்களது திருமண நாளை போன ஆண்டில் சென்னையில் அருணுடன் கொண்டாடினோம். அல்டோ காரில் திருக்கடையூர், கும்பகோணம் உப்ப்லியப்பன்கோவில் சென்று வந்தோம்.இந்த ஆண்டு அமெரிக்காவில் எண்கள் திரு மணநாளை அருணுடன் கொண்டாடுகிறோம். அருண் எங்களுக்கு திருமண நாள் பரிசு கொடுத்தான்.

திருமண வாழ்த்துஅட்டை,டிரில்லிங்மிஷன், மற்றும் கண்ணாடி டம்ளர் செட் பரிசு அளித்தான் . நாங்கள் அவனை வாழ்தினோம். மாலை நூறு மைல்தொலைவு உள்ள நியூ ஜெர்சி பிரிட்ஜ் வாட்டர் ஸ்ரீ வெங்கடேஸ்வர கோவில் சென்றோம். நாங்கள் சென்ற நேரம் தீப ஆராதனை நடை பெற்றது. சதுர்த்தியை முன்னிட்டு பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் நடை பெற்றது.

இங்கு சிவன், பார்வதி, முருகர், வள்ளி தேவானை ,ராமர், அனுமான், நவக்ரகங்கள் , ஐயப்பன் உட்பட அனேக தெய்வங்களும் சிறப்பான அலங்காரத்துடன் காணப்பட்டது, இங்கு பெருமாள் பாலாஜி நல்ல ஆபரணம், மற்றும் பல விதமான பூ அலங்காரத்துடன் கண்ணை கவரும் வண்ணம் காட்சி அளித்தார். இங்கு வெள்ளியில் ரிஷபம், யானை, கருடன், ஆதிசேஷன், மயில் மூஞ்சூர் ஆகிய வாகனங்கள் கலை நுணுக்கத்துடன் மிக சிறப்பாக பளபளப்புடன் காண பட்டது. இங்கு மோட்டார் வாகனங்களுக்கு பூஜை செய்ய தனி இடம் உண்டு. அருண் காருக்கு இங்கு தான் பூஜை செய்துள்ளான்.

பின்பு நாங்கள் அங்குள்ள சரவணா பவன் ஹோட்டலுக்கு சென்று சென்னை போலவே சுவையான உணவு சாப்பிட்டு வீடு திரும்பினோம். அமெரிக்காவில் திருமண நாள் மறக்க முடியாத சிறந்த நாளாக இருந்தது.

No comments:

Post a Comment