அமெரிக்காவில் இந்நாளை மிகவும் சிறப்பாக கொண்டாடுகிறார்கள். இதன் பொருட்டு கடை மற்றும் ஹோடேல்களில் சிறப்பு தள்ளுபடி கொடுக்கிறர்கள். சிறு கிராமங்களில் கூட சந்தை கூடுகிறது. துணி முதல் பல்வேறு பொருட்களும் சலுகை விலையில் விற்பனை செய்கிறார்கள். இந்த விழாவை கொண்டாடும் பொருட்டு அருண் எனக்கு நீல நிற டி ஷர்ட்a வாங்கி கொடுத்தான். மற்றும் Bushkill Falls என்ற இடத்திற்கு அழைத்து சென்றான்.
சுமார் நூறு ஆண்டுகளுக்கு முன்னர் பூர்வீக அமெரிக்க குடி மக்கள் இங்கு குடியேரி சிறிது சிறுதாக முன்னேற்றம் அடைய செய்தனர். இன்று உலகம் போற்றும் சிறந்த சுற்றுலா மையமாக இருக்கிறது. அனேக பூங்காக்கள், படகு துறைகள், படகு சவாரி, சிறுவர் பூங்கா என பல்வேறு இடங்கள் நிறைந்து காண படுகிறது. இங்கு ஹோடேலில் சுவையான உணவு சுடசுட தயாரித்து தருகிறார்கள்.
மிக பெரிய அடர்ந்த காட்டில் மூன்று மைல் தொலைவு சென்றோம். சுமார் பன்னிரண்டு அருவிகள் அடர்ந்த மலையில் இருந்து வெவேறு வடிவங்களில் கொட்டுகிறது. சில அருவியை காண மரம் படிக்கட்டுகள் உண்டு. சில இடங்களில் உள்ள அருவிக்கு செல்ல அடர்ந்த காடுகளுக்குள் செல்ல வேண்டும். வழியில் பறவைகள், மான்கள், மிக பெரிய விண்ணை தொடும் மரங்கள், சிறு கோடு போன்ற நதி இவைகள் மனதில் அச்சத்தை ஏற்படுத்தினாலும் சிறப்பான இயற்கை காட்சிகள் மனதிற்கு ரம்மியமானதாக இருக்கிறது.
இந்த காடுகள் பனி காலத்திலும் வெய்யில் காலத்திலும் வெவேறு வடிவாங்களில் காண படும். இதில் Main Falls, Bridal Falls, Bride Maid Falls என்றர் மூன்று அருவிகளும் அடுத்து அடுத்து பக்கத்தில் கொட்டுவது சிறப்பு அம்சமாகும். இந்த காட்டில் சென்று வர மூன்று வழிகள் உண்டு. நாங்கள் பெருவழி பாதையை தேர்வு செய்தோம். (Long distance).
இந்த பாதை சுமார் எட்டு கிலோமீட்டர் தொலைவு ஆகும். இதை வரைபடம் மூலம் மஞ்சள், சிகப்பு, பச்சை என மூன்று வண்ணங்களில் குறித்து வைத்துள்ளார்கள். நம் தேவைகேற்றபடி வண்ணங்கள் தேர்ந்து எடுத்து நம் விருப்பப்படி செல்லலாம். நாங்கள் சிவப்பு வண்ண பாதையை தேர்வு செய்து அதிக தூரம் சென்றோம். அங்கங்கு மரத்தில் சிவப்பு வண்ணத்தை பார்த்து அதன்படி அந்த பாதையில் சென்றோம். இல்லாவிடில் வழி தவறி காட்டுக்குள் சென்று விடும். யாரையும் விசாரிக்காமல் வண்ணதின்படிசரியான பாதையில் செல்லலாம்.
No comments:
Post a Comment