நாங்கள் மேற்கூறிய கடற்கரையை சென்று பார்த்தோம். இது அமெரிக்காவில் நாங்கள் முதல்முதலில் பார்த்த கடற்கரை ஆகும் . இங்கே மரப்பாலம் அமைத்து பல அடி தூரம் கடலின் அழகை காணும் பொருட்டு, இப்பாலம் அமைக்க பட்டுள்ளது. காலில் கடல் நீர் படா வண்ணம் , கடலில் அதிக தூரம் சென்று கடலின் அழகை ரசிக்கும் வண்ணம் இப்பாலம் அமைந்துள்ளது.
இங்கே கடலில் குளிப்பவர்களை தண்ணீரில் அடித்து செல்லாமல் காப்பாற்ற Sea guard என்ற பாதுகாவலர்கள் கரையில் அங்கங்கே உயரமான மேடையில் அமர்ந்து கண்காணிக்கிறார்கள் .இவர்கள் ஆற்றும் பணி மேலானது. மனித உயிருக்கு அமெரிக்கர்கள்கொடுக்கும் மதிப்பு இதனை எடுத்து காட்டுகிறது.
HAMPTON ROADS BRIDGE TUNNEL: இந்த பாலம் அட்லாண்டிக் கடலின் மீது கட்டப்பட்ட பாலம் ஆகும். இது சுமார் பதினாறு மைல் நீளம் உள்ளது. நடுவே கப்பல்கள் செல்லும் அளவிற்கு கடலின் அடியில் சுரங்க பாதை பதினாலு மைல் தூரம் உள்ளது. இது இரண்டு இடங்களில் கடலில் நடுவே வருகின்றது. ஒரு பாதை கப்பல் போவதற்கும் மற்றது கப்பல் வருவதற்கும் என வழி அமைத்துள்ளனர். இப்பாலம் அதிக வலுவுள்ளதாக அமைக்க பட்டுள்ளது.
அனேக மிக பெரிய வாகனங்கள் கூட செல்லலாம் . இதுவும் இரு வழி பாதை ஆகும். நாம் இப்பாலத்தில் காரில் செல்லும் போது அடுத்த பாலம் ( வரும் வழி ) பார்த்து மகிழலாம் . இந்த பாலம் கடலின் மேல் கட்ட பட்டதால் சுமார் முன்னுறு மைல் சாலை வழியே சுற்றி செல்லாமல் நாற்பது மைல் கடல் வழியாக சென்று பயணத்தை முடிக்கலாம். இதற்கு கட்டணம் ஒரு வழி பதினாலு டாலர் ஆகும். நாங்கள் இந்த பயணித்தை ரசித்து மகிழ்ந்தோம்.
CAPEMAY LEWES FERRY:
நாங்கள் எங்கள் காருடன் Capemay என்ற துறைமுகம் வந்து இங்கே புறப்படும் கப்பலில் எண்பது நிமிடங்கள் சுமார் ஐன்பது மைல் அட்லாண்டிக் கடலில்
எங்கள் காருடன் பயணம் செய்தோம். துறைமுகம் வந்த பின் டிக்கெட் பெற்று வரிசையில் நிற்க வேண்டும். பின்பு அதிகாரிகள் வந்து கப்பலின் அடி தளத்திற்கு செல்ல வழி சொல்கிறார்கள் . அருண் காரை ஒட்டி கப்பலில் எங்களுக்கென ஒதுக்கப்பட்ட இடத்தில் நிறுத்தினான் . துறைமுகத்தில் இருந்து கப்பலுக்குள் செல்ல இரும்பு தகடு பாலம் அமைக்க பட்டுள்ளது. பின்பு காரை நிறுத்தி விட்டு கப்பலின் உள்ளே சென்றோம்.
கப்பலின் அழகை கண்டோம். டெக் ஒன்று முதல் ஐயிந்து
வரை உள்ள மிக பெரிய கப்பல் ஆகும் . ஒவ்வொரு மாடிக்கும் செல்ல லிப்ட் உண்டு. நாங்கள் எல்லா மாடிக்கும் சென்று கடலின் அழகை ரசித்தோம். வழியில் டால்பின் மற்றும் ஜெல்லி தென்பட்டது. நாங்கள் கப்பலில் எங்கள் காருடன் பயணம் செய்வது இதுவே முதன் முறையாகும். கப்பல் பற்றிய தகவல்களை அறிந்தோம், நாங்கள் அமெரிக்கா பயணத்தில் தான் விமானம் மற்றும் கப்பலில் பயணம் செய்யும் நீண்ட நாள் ஆசை நிறைவேறியது. நாங்கள் நியூ ஜெர்சி வந்து சாலை மூலம் காரில் வீடு வந்து சேர்ந்தோம்.
எங்களது அடுத்த பயணம் விரைவில் தொடரும்.
No comments:
Post a Comment