Tuesday, July 14, 2009

July 4th Road ட்ரிப் - Part I!

Date: 3 .07.09 to 5.07.09 (3 days)

Places visited: Pittsburg, Luray Caverns, Skyline Drive, Virgenia Beach, Chesapeake Bay Bridge in Atlantic Ocean.

3.07.09 அன்று காலை ஆறுமணிக்கு புதிய நீல நிற வாடகை கார் எடுத்து முன்னுறு மைல் பயணம் செய்து பன்னிரண்டு மணி அளவில் Pittsburgh பெருமாள் கோவிலுக்கு சென்றோம். மிக பெரிய பிருமாண்டமான இக்கோவில் அமெரிக்கா வாழ்இந்தியர்களால் கட்டப்பட்டது. சிறப்பாக பெருமாள் தாயார் தர்சனம் செய்தோம். சிறு மலை மீது கார் செல்லும் பாதையுடன் உள்ளது. நேர்த்தியான வேலை பாடுடன் கோவில் கட்டப்பட்டுள்ளது. தற்போது பாலாலயம் செய்துள்ளார்கள். கோவிலில் உள்ள காண்டீனில் சாம்பார் சாதம் , புளியோதரை , தயிர் சாதம் , லட்டு உப்புமா ஆகியவை வாங்கி சாப்பிட்டோம்.

பின்பு pittsburgh நகரத்தில் உள்ள ரோப் ரயில் இல் பயணம் செய்தோம் இது மலை உச்சிக்கு செல்கிறது இங்க இருந்து பார்தால் நகரின் முழு தோற்றம் நன்கு தெரியும் . பிறகு நாங்கள் ஹோட்டல் ஷெரிடன் ஒன்பதாவது மாடியில் தங்கினோம். எல்லா வசதிகளுடன் எங்கள் ரூம் மிக சிறப்பாக இருந்தது. இந்த ஹோட்டல் அறையில் இருந்து பார்த்தால் அருகில் ஓடும் நதி, அதில் செல்லும் படகுகள், கப்பல்கள், ஓவர் பிரிட்ஜ் , ரயில்வே ஸ்டேஷன், மற்றும் மிக பெரிய கட்டிடங்கள் , மலை ஆகியவை மிக நன்கு தெரிகிறது.

மாலையில் எங்கள் காரில் சென்று படகு துறை, வண்ண நீருற்று, பூங்காக்கள் , உயரமான கட்டிடங்கள், ஆகியவற்றை கண்டு களித்தோம். இந்த இடத்தில் மூன்று ஆறுகள் ஒன்றாக கலந்து ஓடுகிறது. இதற்கு Golden Triangle i.e. Allegheny river, Monongahela River, Ohio River என்று பெயர். அன்று இரவு அமெரிக்கா சுதந்தர தினத்தை முன்னிட்டு எட்டு மணிக்கு Nikwallenda என்ற சாதனை மனிதர் பொது மக்களின் முன்னிலையில் இரும்பு கம்பியை Allegheny River இல் இரு புறமும் இணைத்து நடந்து சாதனை புரிந்தார். இதை காண பல மக்கள் கூடி இருந்தார்கள்.

பல விதமான படகு போட்டிகள் நடை பெற்றது. இது கண்ணுக்கும் , மனதுக்கும் மகிழ்ச்சி அளிக்கும் சிறந்த சுற்றுலா ஸ்தலமாகும். இந்த நகரம் ஒரு முறை வெள்ளத்தாலும் மற்றும் ஒரு முறை நெருப்பிலும் பாதிக்க பட்டுள்ளது. இருப்பினும் இதனை மீண்டும் சிறந்ததாக தற்போது உருவாக்கப்பட்டுள்ளது.

இங்குள்ள பூங்காவில் மூன்று நாட்களாக ஆங்கில இசை நடை பெற்றது. நாங்கள் சென்ற சமயம் Bon The Bridge என்ற இசை குழுவினர் பாடி மகிழ்வித்தனர். மிகவும் நன்றாக இருந்தது. இரவில் மலையில் இருந்து பார்த்தால் நகர் முழுவதும் விளக்கு ஒளியில் பிரகாசிக்கிறது.

4.07.09 SKYLINE DRIVE:

இன்று காலை கிளம்பி சுமார் 120 மைல்கள் மலை மீது ஏறி வளைந்து வளைந்து சென்றோம். இது Skyline Drive என்று அழைக்கபடுகிறது. நாங்கள் காரில் இதனை கண்டோம்.விண்ணை தொடும் மரங்கள் , பல்வேறு நீர் விழுச்சிஎன இக்காட்டு மலை பிரதேசம் வழி நெடுக காட்சி தருகிறது.

நாங்கள் சுமார் ஐயிந்து மணி நேரம் இந்த மலையில் பிரயாணம் செய்தோம். பல அதிசயங்களை கண்டோம். வழியில் பல மான்களை கண்டோம். இதனைதொடர்ந்து பாதி வழியில் LURAY CAVERNS என்ற மலையில் பல வித ரசாயன மாற்றங்களினால் பல்வேறு வடிவங்களில் சுரங்க பாதையில் பூமிக்கு அடியில் சுமார் ஒன்றரை மைல் சுற்றளவு உள்ள இந்த அழகிய இடத்தில் பாறைகள் நிறைந்து காணபடுகின்றன. பல கோடி கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே தண்ணீர் சொட்டி சொட்டி ,இப்பாறைகள் , சில வடிவங்களில் தோற்றம் அளிக்கிறது.

இதனை அழகுற அமைத்து, விளக்கொளி ஏற்பாடு செய்து காண்பிக்கின்றனர். உள்ளே செல்லும் போது நம்மிடம் ஒரு mp 3 player with head phone கொடுத்து விடுகின்றனர். இதில் நம்பர்கள் கொடுக்கப்பட்டுள்ளது.. நாம் காணும் இடங்களிலும் நம்பர் உள்ளது. நாம் பார்க்கும் இடம் வந்த உடன் நம்பரை அமுக்கியவுடன் அந்த இடம் பற்றிய தொகுப்புரையை நம் காதில் உள்ள கருவி மூலம் அறிந்து கொள்ளலாம் . அதே போல் பதினேழு இடங்களில் காட்சிகள் உண்டு, நாமே இவற்றை பற்றி விவரமாக அறிய இக்கருவி பயன் படுகிறது.

குழந்தைகள் அறிய அதற்கு ஏற்றவாறு அக்கருவியில் மழலை மொழியில் அழகான புரியும் விதத்தில் ஆங்கில தொகுப்பும் உள்ளது... இதற்கு தனி நம்பெர் உண்டு. நாங்கள் இதனையும் கேட்டு ரசித்தோம். பின்பு அருகே உள்ள அருங்காட்சியகம் சென்று பல கால கட்டங்களில் இருந்த காரின் மாடெல்கள் மற்றும் அதன் வளர்ச்சியையும் கண்டோம். பின்பு மாலை மீண்டும் அதே மலையில் அறுபது மைல்கள் பயணம் செய்தோம். அந்த மலையில் குறுக்கே நடை பாதை உண்டு. சுமார் இரண்டாயிரம் மைல் நடை பயணமாக பாஸ்டன் நகரின் எல்லை வரை செல்கிறது. இந்த நடை பயணத்தை ஆண்டிற்கு 150 பேர் மேற்கொண்டு சாதனை புரிகின்றனர். இதற்க்கு APPALACHIAN TRIAL என்று பெயர்.

இக்காட்டில் பல மிருகங்கள் உண்டு . நாங்கள் இவற்றை கண்டு பின் இந்த மலையின் அதிக உயரமான 3680 feet Highest point on drive elevation top of height என்ற அறிவிப்பு பலகையை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து கொண்டு கீழே இறங்கினோம். .அன்று இரவு New port news என்ற நகரில் சூப்பர் எட்டு என்ற ஹோடேலில் தங்கினோம்.

(தொடரும்...)

No comments:

Post a Comment