Tuesday, June 16, 2009

நயகரா மற்றும் ஆயிரம் தீவுகள்!

சுற்றுலா நாள் : மே 22, 23, 24 May 22: அன்று மாலை 6 மணி அளவில் வீட்டிலிருந்து புறப்பட்டு, சுமார் நடு இரவு 1 மணிக்கு ஆயிரம் தீவுகள் (செயின்ட் லாரன்சே நதியில் உள்ளது) என்ற இடத்தை சென்றடைந்தோம். அன்று இரவு ஒரு காரவனில் தங்கினோம். இது மிகவும் புதிய அனுபவம். இரு குடும்பங்கள் தங்கும் அளவிற்கு வசதிகள் உள்ளன. இதில் இரு படுக்கை அறைகள், குளிர்சாதன பெட்டி, தொலைக்காட்சி பெட்டி, ஓவன், சுடுநீர் வசதி, சமையல் பாத்திரங்கள், சோபா செட், டைனிங் டேபிள், தொலைபேசி, குளியல் அறை, கடிகாரம் போன்ற அனைத்தும் உள்ளன. இது போன்று நிறைய காரவன் உள்ளது .(RECRCATION VEHICLE) இதில் இரு இரவுகள் தங்கினோம். அருண் internet மூலம் முன்பதிவு செய்திருந்ததால், campground'இல் எங்களுக்காக ஒதுக்கப்பட்ட caravan பூட்டபடாமலும், அதன் உள்ளே இருக்கும் மேஜையில் சாவியும் காத்திருந்தது. vacate செய்யும் போதும் சாவியை மேஜை மீது வைத்து விட்டு கிளம்பினோம். நம்பிக்கைக்கு இந்த நாட்டு மக்கள் கொடுக்கும் முக்கியத்துவம் எங்களை வியப்பில் ஆழ்த்தியது.

ஆயிரம் தீவுகள் என்ற இடம் பல ஆயிரகணக்கான தீவுகள் அடங்கியது. புகழ் பெற்ற நயாகரா நீர்விழ்சிக்கு செல்கிறது. நாங்கள் இத்தீவில் இயந்ததிரபடகு மூலம் எல்லா இடங்களையும் பலமணி நேரம் பார்த்து ரசித்தோம். அருண் படகை வரைபட உதவியுடன் இயக்கினான். நானும் உமாவும் படகை ஓட்டினோம்.

May 23: இன்று, நாங்கள் காரில் புகழ் பெற்ற நயாகரா நீர்வீழ்ச்சி காண சென்றோம். சாலைகள் நன்றாக பராமரிக்க படுகிறது. கார் நிறுத்த அஞ்சு அடுக்கு மாடி கட்டிடத்தில் வுள்ள கார் நிறுத்தும் இடத்தில் விட்டு விட்டு லிப்ட் மூலம் கீழே வந்தோம். இந்த நீர்விழுச்சி 1885 முதல பராமரிக்க படுகிறது. அருவீ காண நீல நிறமுள்ள பெரிய maid of the mist என்ற கப்பலில் நீல நிற உடை அணிந்து அருகில் சென்றோம்.

இந்த அருவி மிகவும் பிரமாண்டமாக வுள்ளது. இது கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய இடங்களிலிருந்து அஞ்சு ஆறுகளாக வந்து ஒன்று சேர்ந்து மிக அகலமாக பல பிரிவுகளாக கொட்டுகிறது . இங்கிருந்து பார்த்தால் கனடாவில் உள்ள மிக பிரமாண்டமான கட்டங்களை காணலாம். கனடாவையும் அமெரிக்காவையும் பிரிக்கும் ரெயின்போ பாலம் இங்கிருந்து காணலாம். நாங்கள் பல கோணங்களில் கண்டு களித்தோம். இந்த பாலம் இரு நாடுகளால் பராமரிக்க படுகிறது.

அங்கு பல பூங்காக்கள் கண்டு களித்தோம். இரவில் பல வண்ண விளக்குகளால் இந்த அருவி அலங்கரிக்க படுகிறது. இது கண்ணை கவரும் காட்சியாக யுள்ளது. அன்று இரவு நடைபெற்ற வானவேடிக்கை பார்த்து ரசித்தோம். அன்று விடுமுறை என்பதால் அந்த சிறப்பு காட்சி காணும் வாய்ப்பு கிடைத்தது. அன்று இரவு BUFFALO என்ற இடத்தில் தங்கினோம்.

May 24: இன்று காலை புறப்பட்டு லேட்ச்வோர்த் ஸ்டேட் பார்க் (Letchworth state park, famously called as 'Grand Canyon of the east') என்ற பூங்காவுக்கு வந்தோம் .இது 10 மைல் சுற்றளவுள்ள மிகப்பெரிய பூங்காவாகும். இது பல்வேறு நீர்விழுச்சி மற்றும் ஆறுகள், விண்ணை தொடும் மரங்கள் என 14350 ஏக்கர் பரப்பளவில் உள்ள மிக பெரிய பூங்காவாகும். இதனை கண்டு களிக்க நேர்த்தியான தார் சாலைகள் உண்டு! நுழைவு கட்டணம் 25 டாலர். அதன் பிறகு, உலக புகழ் பெற்ற Corning museum of Glass சென்றடைந்தோம். இங்கு பல்வேறு விதங்களில் அலங்காரமான கண்ணாடி குவளை, தட்டுகள், ஆபரணங்கள் போன்ற புகழ் பெற்ற கண்ணாடி தயாரிப்புகளை ஒரே இடத்தில் காண முடிகிறது. ஹாட் கிளாஸ் ஷோ (HOT GLASS SHOW) கண்டு களித்தோம். அதில் கண்ணாடி உருக்கி ஜாடி செய்வதை நேரில் செய்து காண்பித்தனர். அதை பார்த்து விட்டு வீடு திரும்பினோம். அமெரிக்கா வந்து சேர்ந்த முதல் வாரத்தில் எங்களுக்கு கிடைத்த சுகமான அனுபவமாக இந்த பயணம் அமைந்தது! நயாகரா நீர்வீழ்ச்சியின் அழகும் பிரம்மாண்டமும் எங்கள் மனதை விட்டு விலக மறுக்கிறது!

2 comments:

  1. Very good narration.. I always love to read the travelogues in tamil. Somehow I get fascinated to read in tamil and you have described in a beautiful way. Please keep writing in tamil.. You have taken me to the Niagara for sometime and it provided a good break for my tired mind..

    Shekhs

    Sekhs

    ReplyDelete
  2. Pramatham appa...Romba nalla ezhuthiyirukka..Keep writing...

    ReplyDelete