Thursday, September 10, 2009

நியூயார்க் - Part I

நியூயார்க் நகரை காண எங்கள் காரில் கிளம்பி நியூஜெர்சி நகரின் எல்லையில் உள்ள பழங்கால ரயில் நிலையத்தில் காரை நிறுத்தி விட்டு ரயில் நிலையத்தை பார்த்தோம் . சுமார் இருபதுக்கும் மேற்பட்ட இருப்பு பாதைகளை உடைய ரயில் நிலையம் தற்போது காட்சிக்கு மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. ரயில் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆயினும் பல ஆண்டுகளுக்கு முன்னர் இதில் பலர் பயணம் செய்துள்ளனர். தற்போது இந்த இடம் பழமை மாறாமல் நினவு சின்னமாக உள்ளது. இங்கே உள்ள டிக்கெட் கொடுக்கும் இடத்தில் பன்னிரண்டு டாலர் பணம் செலுத்தி சுதந்திர தேவி சிலை காண (STATUE OF LIBERTY) கப்பலை நோக்கி சென்றோம். இங்கே HUDSON ஆற்றில் கப்பல் போக்குவரத்து படகு சவாரி அதிக அளவில் காண படுகிறது. நாங்கள் இந்த ஆற்றின் மூலம் கடல் போன்ற இந்த நதியில் கப்பலில் பயணம் செய்தோம். முதலில் ELLIS ISLAND பார்த்தோம். இங்கு மிக பெரிய MUSEUM உள்ளது. இந்த தீவில் சுமார் ஒரு மணி நேரம் தங்கி இருந்து தொலைவில் உள்ள தீவில் காட்சி அளிக்கும் அமெரிக்க சுதந்திர தேவி சிலையின் அழகை ரசித்தோம். அதே கப்பலின் மேல் தளத்தில் உள்ள பார்வையாளர் அறையில் இருந்து அனேக கப்பல்களையும் தொலைவில் தெரியும் நியூயார்க் நகரின் அழகையும் உயர்ந்த கட்டிடங்களையும் கண்டோம். இப்பூது எங்களுடைய அழகிய கப்பல் சுதந்திர தேவி சிலை காண படகு துறையில் நிறுத்த பட்டுள்ளது. நாங்கள் தீவின் உள்ளே சென்று சிலையின் அழகை பார்வையிட்டோம். இந்த சிலை அமெரிக்கா சுதந்திரம் பெற்ற பின் பிரான்ஸ் நாட்டினர் இதை வழங்கினார் இது மிக பெரிய சிலை ஆகும் . இதனை காண பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் நாள் தோறும் வருகை தருகின்றனர். எப்போதும் அதிக மக்கள் கூட்டம் காண படுகிறது. இங்கு வருவதற்கு இரண்டு வழிகள் உள்ளது. நியூயார்க் நியூஜெர்சி இப்பாதை நதியின் மூலம் மற்றும் கப்பலின் மூலம் நடை பெறுகிறது. நியூயார்க் பகுதியில் இருந்து வரும் மக்கள் தொகை அதிக அளவில் காண படுகிறது. இந்த சுதந்திர தேவி சிலை உள்ள இடம்12எய்க்கர் பரப்பளவு உடையது. சிலையின் உயரம் 151 அடிகள் , பீடம் சேர்த்து 305 அடிகள் ஆகும் இதன் கையில் உள்ள தீபசுடருடன் உள்ள தீபந்தம் செப்பினால் செய்யப்பட்டு தங்க முலாம் பூசப்பட்டது. மற்றொரு கையில் அமெரிக்கா சுதந்திரம் பெற்ற நாளினை குறிக்கும் வகையில் JULY 4 th MDCCL XXVI என்று குறிக்க பட்ட புத்தகம் உள்ளது. oct 28 1886 இல் பிரான்ஸ் நாட்டினர் அமெரிக்காவுக்கு இந்த சிலையை வழங்கினார் .இது அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாட்டின் ஒற்றுமையை குறிக்கிறது. முதன் முதலில் சிலையின் கிரீடம் சிவப்பு வண்ணத்தில் காணப்பட்டது. பின்னர் இது பச்சையாக மாற்ற பட்டது. கிரீடத்தில் உள்ள ஏழு கோடுகள் சூரியனின் ஏழு வண்ணங்களை பிரதி பலிக்கிறது. இதனை கண்ட பின் நியூயார்க் நகரின் அழகை காணும் பொருட்டு காரில் ஹட்சன் நதியின் அடியில் போடப்பட்டுள்ள பாதாள சாலையின் மூலம் நதியை கடந்து நகருக்குள் வந்து சேர்ந்தோம். இந்த இரண்டு மைல்தொலைவு உள்ள பாதாள பாதை நியூஜெர்சி நியூயார்க் நகரங்களின் எல்லையாக விளங்குகிறது.
நியூயார்க் நகரின் பல உயர்ந்த கட்டடங்கள் , பல கடைகள் கண்டோம் இது நம்ப ஊர் சென்னை போன்று நிறைய மக்கள் கூட்டம்மாக போக்குவரத்து நெரிசல் அதிகமாகவும் உள்ள்து. நடை பாதை கடைகள் கண்டோம். அடுத்து 32 ஆண்டுகள் முன்னால் அமெரிக்காவில் உள்ள இந்தியர்கள் கட்டிய ஸ்ரீ மகாகணபதிஆலயம் FLUSHING பயணமானோம். இக்கோவில் THE HINDU TEMPLE SOCIETY OF NORTH AMERICA NY. என்ற அமைப்பின் மூலம் பராமக்க படுகுகிறது தமிழ் பேசும் மக்களால் மீகவும்நன்றாக நடத்தபடுக்றது. இங்கு சுப்ரமணியர் , வள்ளி , தேவானை, ஐயப்பன், நரசிம்ஹர், சக்கரத்து ஆழ்வார் ,பெருமாள் , சிவன் , பார்வதி , நவக்ரகாங்கள் ஆகிய சன்னதிகள் உண்டு. தேவி கொடியூர் மாதா என்ற விக்ரஹம் முதலை மீது கையில் சூலம் ஏந்தி காட்சி அளிக்கிறது. இங்கு வட இந்தியா மக்கள் வந்து பஜன் செய்து வழி பட்டு மகிழ்கின்றனர். இங்கே கான்டீன் சிறப்பாக உள்ளது. நிறைய கூட்டம் காணப்பட்டது. விநாயகசதுர்த்தி அன்று வீதி உலாவில் தங்க ரதத்தில் விநாயகர் நகர் வலம் வந்து அருள் புரிவார் . இதனை மக்கள் சிறப்பாக கொண்டாடுகின்றனர். இங்கே தமிழ் ஸ்லோக புத்தகங்கள் ஸமஸ்க்ரிதநூல்கள் ராமாயணம், கீதை புத்தகங்கள், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் கிடைக்கிறது. இரவில் BROOKLYN BRIDGE, MANHATTAN BRIDGE பார்த்தோம். ரயில் மற்றும் சாலையும் இதே பாலத்தில் மேலும் கீழும் அமைக்க பட்டுள்ளது. இரவில் வண்ண விளக்கு ஒளியில் இந்த பாலம் மற்றும் நகரம் , நதியில் செல்லும் கப்பல் ,படகு நம் கண்களுக்கு விருந்து அளிக்கிறது. அனேக மக்கள் இதனை கண்டு மகிழ மாலை முதலே வருகின்றனர். புகைப்பட கலைனர்கள் அதிக அளவில் வந்து பல கோணங்களில் புகைப்படம் எடுக்கின்றனர்.
(தொடரும்..)

No comments:

Post a Comment