இன்று காரில் கிளம்பி வாஷிங்டன் நகரை காண சென்றோம். எங்கள் காரை யூனியன் ஸ்டேஷன் என்ற உலகில் மிக நேர்த்தியான மற்றும் தொன்மையான ரயில் நிலையத்தில் உள்ள ஐந்தாவது மாடியில் காரை நிறுத்தி விட்டு லிப்ட் மூலம் கீழே வந்தோம் . இந்த ரயில் நிலையத்தில் Postal museum, American memorial, shops, restaurants, ஆகியவை உள்ளன. கட்டிட கலையில் சிறந்த இந்த ரயில் நிலையம் பார்வையாளர்களையும் சுற்றுலா பயணிகளையும் ஈர்க்கின்றது.
இங்கிருந்து பஸ்கள் அனைத்து இடங்களுக்கும் செல்கின்றது. மிக நேர்த்தியாக பராமரிக்க படுகிறது. தவிர விமான நிலையத்தில் நம் உடமைகளை பெறுவது போல இந்த ரயில் நிலையத்தின் வாசல் வரை Baggage carousel மூலம் நாம் நம் உடைமைகளை பெற்று செல்லலாம் . இது மிகவும் சிறப்பான முறையாகும். இதனை கண்டு ரசித்து பின்பு வெளியே வந்து நாங்கள் Open top sight seeing bus (bottom aircondition and top open என) அழகாக வடிவமைக்கப்பட்ட பஸ் மூலம் முப்பது இடங்களை பார்வையிட்டோம். இதில் வெள்ளை மாளிகை குறிப்பட தக்கது!
National Air and Space Museum
இங்கு ஆரம்பம் முதல் இன்று வரை உள்ள விமானம் சம்பந்தமான காட்சிகள், படங்கள், சினிமா என வியக்கும் வண்ணம் வடிவமைத்து இருக்கிறார்கள். மிக பெரிய அருங்காட்சியகம் ஆகும். பல்வேறு கால கட்டங்கள்கடந்து வந்த ராணுவ விமானம் முதலில் ரைட் சகோதரர்கள் தயாரித்த விமானம் பார்த்தோம்.
சந்தரினில் இருந்து கொண்டு வரப்பட்ட கல் மண் போன்றவை பார்வைக்கு வைக்க பட்டுள்ளது .சமிபத்தில் விண்வெளியில் ராக்கெட்டில் காலமான இந்திய விண்வெளி ஆராய்ச்சி பெண்மணி கல்பனா சாவ்லா பயணம் செய்த ராக்கெட்டின் மாதிரி உள்ளது. Neil Armstrong நிலவில் காலடி வைத்த படம், space shuttle, அப்போலோ விண்வெளி கலம் (சந்திரனில் முதலில் இறங்கிய விண்வெளி கலம்) இவற்றின் புகை படம் வைத்து இருக்கின்றனர்.
விமானம் உள்ளே உள்ள அனைத்து சாதனம், ம்ற்றும் காக்பிட் இல் அமர்ந்து பார்க்கலாம். இதுபோல் பல காட்சிகண்டோம் பின்பு இரண்டு சினிமாக்கள் பார்த்தோம். இதுவும் அங்கேயே உள்ளது. IMAX Theater "To Fly" என்ற படம் பார்த்தோம்.
இது என்னை கவர்ந்த இரண்டாவது அமெரிக்கா படம் ஆகும். முதன் முதலில் மனிதன் எவ்வாறு நடந்து, குதிரை, மோட்டார் வாகனம், ரயில் பின்னர் விமானம் ராக்கெட் என பயணம் செய்வது குறித்த படம். இது பலூனில் பறப்பது முதல் Hang Gliding வரை பலவித சிலிர்க்க வைக்கும் வியப்புறும்காட்சிகள் அனிமேஷன் கலந்து தயாரித்து உள்ளனர்.
படம் பார்க்கும்போது நாம் அங்கேயே செல்வது போலவும், ரயில் நம் மீது மோதுவது போலவும் , விமானத்தில் பறப்பது போலவும் காட்சிகள் மனதில் பதிவு ஆவதுடன் நம்மையே மறக்க செய்கிறது. இவ்வளவு பெரிய திரையை நான் கண்டதே இல்லை. இந்த திரை அரங்கில் ஐந்து மாடி முழுவதும் அமர்ந்து இந்த பெரிய திரையில் படம் பார்கிறார்கள்;
நாங்கள் இதே இடத்தில் உள்ள இருபத்து மூன்று நிமிடங்கள் ஓடும் DIGITAL DOME TECHNOLOGY COSMIC COLLISIONS A 23 Minute digital dome experience என்ற சிறப்பான கோள்கள் பற்றிய படம் பார்த்தோம். வியக்கும் வண்ணம் உள்ளது. சூரியன் மற்றும் இதர கோள்கள் அதன் ரசாயன மாற்றங்கள் அதனால் உண்டாகும் விளைவுகள் பற்றிய படமாகும்.
மன நிறைவுடன் வீடு திரும்பினோம்.
No comments:
Post a Comment